Apple ஒரு $3 டிரில்லியன் நிறுவனம்

Apple ஒரு $3 டிரில்லியன் நிறுவனம்

அமெரிக்காவின் iPhone தயாரிப்பு நிறுவனமான Apple முதல் தடவையாக பங்கு சந்தையில் $3 டிரில்லியன் ($3,000 பில்லியன்) பெறுமதியை அடைந்து உள்ளது. இந்த ஆண்டின் முதல் பங்கு சந்தை வர்த்தக தினத்திலேயே Apple இந்த உயர்வை அடைந்து உள்ளது.

Apple நிறுவனம் தயாரிக்கும் iPhone விற்பனையே இந்த நிறுவனத்தின் வருமானம் தொடர்ந்தும் உச்சத்தில் இருக்க காரணம். ஆண்டுதோறும் பல மில்லியன் iPhone கள் விற்பனை செய்யப்படுகின்றன.

2018ம் ஆண்டு Apple நிறுவனத்தின் பங்குசந்தை பெறுமதி $1 டிரில்லியன் ஆக இருந்தது. 2020ம் ஆண்டு $2 டிரில்லியன் ஆக இருந்தது.

தற்போது சுமார் $180 பெறுமதியை கொண்ட Apple பங்கு ஒன்று 1980ம் ஆண்டு சந்தைக்கு வந்தபோது $0.10 ஆக மட்டுமே இருந்தது. ஆனால் 1997ம் ஆண்டில் இந்த நிறுவனம் bankruptcy வரை சென்றும் இருந்தது. 2007ம் ஆண்டு வந்த iPhone Apple நிறுவனத்தின் வருமானத்தை பெருமளவில் அதிகரித்தது.

இந்த நிறுவனத்திடம் தற்போது சுமார் 16.41 பில்லியன் பங்குகள் (AAPL) உள்ளன. பங்கு ஒன்றின் விலை சுமார் $180 ஆகும்.