இலங்கை கடற்படைக்கு சீனாவின் பாவித்த கப்பல்

சீனா இலங்கைக்கு வழங்கிய பாவித்த யுத்த கப்பல் (frigate) இன்று இலங்கை வந்துள்ளது. 1994 ஆம் ஆண்டு முதல் சீனாவின் கடல் படையால் பயன்படுத்தப்பட்ட Tongling என்ற யுத்த கப்பல் இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது. . இந்த கப்பல் இலங்கைக்கு கடந்த மாதம் ஷாங்காய் நகரில் கையளிக்கப்பட்டது. இந்த கப்பலை செலுத்தும் செயல்பாடுகளை அறிய 18 இலங்கை கடற்படை அதிகாரிகளும், 92 கடற்படையினரும் சீனா சென்றிருந்தனர். . சுமார் 2,300 தொன் எடை கொண்ட இந்த […]

2019 FIFA கேடயத்தை வென்றது அமெரிக்கா

2019 ஆம் ஆண்டின் பெண்களுக்கான FIFA (Federation Internationale de Football Association கேடயத்தை வென்றது அமெரிக்கா. நெதர்லாந்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இன்று பிரான்சின் Lyon நகரில் இடம்பெற்ற இறுதி ஆட்டத்தில் அமெரிக்கா 2 goal களையும் , நெதர்லாந்து 0 goal களையும் பெற்றுள்ளன. . 2019 ஆம் ஆண்டின் வெற்றியும், 2015 ஆம் ஆண்டின் வெற்றியும் அமெரிக்க பெண்கள் FIFA அணிக்கு அடுத்தடுத்தான (back-to-back) வெற்றியை வழங்கி உள்ளது. இன்றைய வெற்றியுடன் அமெரிக்க பெண்கள் […]

கலிபோர்னியாவில் 7.1 அளவிலான நிலநடுக்கம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், Las Angeles நகருக்கு வடகிழக்கே சுமார் 240 km தூரத்தில் உள்ள Ridgecrest என்ற சிறு நகரில் இன்று 7.1 அளவிலான (magnitude) நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது. இதே இடத்தில் 4 ஆம் திகதியும் 6.4 அளவிலான நிலநடுக்கம் நிகழ்துள்ளது. . வழமையாக 7.1 அளவிலான நிலநடுக்கம் பாரதூரமானது என்று கருதப்பட்டாலும், இன்றைய நிலநடுக்கம் Las Angeles நகருக்கு தொலைவில் இடம்பெறத்தால் பாதிப்புகள் மிக குறைவானவையே. . இன்றைய நடுக்கத்தின் காரணமாக பெரும் கல் […]

1903 இல் உருவான விமானத்தை 1770 இல் பறக்கவிட்டார் ரம்ப்

எப்போதுமே உண்மைக்கு புறம்பான விசயங்களை தன் வாய்க்கு வந்தபடி கூறி, பின் அந்த தவறுகளையும் அலாட்டி மறுக்கும் பண்பு கொண்டவர் அமெரிக்க ஜனாதிபதி ரம்ப். நேற்று ஜூலை 4 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலும் ரம்ப் இவ்வாறு ஒரு பெரிய தவறை கூறி, பின் முழு பூசணிக்காயை சோற்றுள் மறைப்பது போல் மறைக்கவும் முயன்றுள்ளார் ரம்ப். . ரம்ப் மேடையில் ஆற்றிய தனது உரையில் அமெரிக்க புரட்சியாளர் 1770 ஆம் ஆண்டுகளில் விமான நிலையங்களை கைப்பற்றினர் […]

Samsung இலாபம் 56% ஆல் வீழ்ச்சி

Samsung என்ற தென்கொரியாவின் இலத்திரனியல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையான காலாண்டின் இலாபம் (operating profit) 56% ஆல், அல்லது $5.6 பில்லியன் டாலரால் வீழ்ந்துள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நிலவிவரும் பொருளாதார யுத்தமே Samsung நிறுவன இலாபம் வீழ்ச்சி அடைய முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது. . இதே காலாண்டில் Samsung நிறுவனத்தின் வருமானமும் $48 பில்லியன் பெறுமதியால் வீழ்ந்துள்ளது. . Memory chip உட்பட பல இலத்திரனியல் […]

Gallagher யுத்தக்குற்றவாளி அல்ல, இராணுவம் தீர்ப்பு

அமெரிக்காவின் முன்னாள் விசேட படை (SEAL) உறுப்பினரான Edward Gallagher யுத்தக்குற்றம் எதையும் செய்திருக்கவில்லை என்று அமெரிக்காவின் இராணுவ நீதிமன்றம் நேற்று செய்வாய் தீர்ப்பு கூறி உள்ளது. குற்றம் அற்றவர் என்று கூறப்படும் இவரை அமெரிக்க ஜனாதிபதி ரம்பும் வாழ்த்தி உள்ளார். . தற்போது 40 வயதுடைய Gallagher மீது ஈராக்கிய கைதி  ஒருவரை கொலை செய்தமை, ஈராக்கிய வயோதிபர் ஒருவரையும், சிறுமி ஒருத்தியையும் கொலை செய்ய முயன்றமை, கைதிகளுடன் சட்டவிரோதமாக படம் பிடித்தமை போன்ற பல […]

அமெரிக்க சுதந்திர தினத்தில் இராணுவ தளபாடங்கள்

ஜூலை 4ஆம் திகதி இடம்பெறும் அமெரிக்காவின் சுதந்திர தினத்தன்று அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் (Wasington DC) விமானங்கள், tanks உட்பட்ட இராணுவ அணிவகுப்பை செய்யுமாறு பணித்துள்ளார் ஜனாதிபதி ரம்ப். ஆனால் Democrsts கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த நகரின் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். . சில M1A1 வகை tank அப்பகுதிக்கு ஏற்கனவே நகர்த்தப்பட்டுள்ளது சிலரால் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த tank ஒவ்வொன்றும் சுமார் 60 தொன் எடை கொண்டது. இந்த எடை அந்த வீதிகளுக்கும், பாலங்களுக்கும் […]

39 வயது வில்லியத்தை வென்றார் 15 வயது Gauff

தற்போது 15 வயதுடைய Cori Gauff என்ற அமெரிக்கா tennis விளையாட்டு வீராங்கனை தற்போது tennis விளையாட்டில் இராணியான இருக்கும் வீனஸ் வில்லியத்தை (Venus Williams) இன்று வென்றுள்ளார். தற்போது இடம்பெறும் விம்பிள்டன் (Wimbledon 2019) போட்டியிலேயே Gauff தனது சாதனையை நிகழ்த்தி உள்ளார். . Gauff பிறப்பதற்கு முன்னரே வீனஸ் வில்லியம் 2 விம்பிள்டன் வெற்றிகள் உட்பட 4 Grand Slam வெற்றிகளை வென்றிருந்தவர். . 1968 ஆம் ஆண்டு முதல் இன்றுவரையான காலத்தில் அதிகுறைந்த […]

ஹாங்காங் ஆட்சி மன்றில் ஆர்ப்பாட்டம்

இன்று ஹாங்காங் பகுதிக்கான விசேட ஆட்சி மன்றுள் ஆர்பாட்டக்காரர்கள் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இவர்கள் அங்கு சேதங்களை விளைவித்தால் போலீசார் கண்ணீர் புகை குண்டு பாவனை மூலம் ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டி உள்ளனர். . அண்மையில் ஹாங்காங் ஆட்சி சபை ஹாங்காங் சந்தேக நபர்களை சீனாவுக்கு அனுப்பக்கூடிய வகையில் சட்டத்தை மாற்றி அமைக்க முனைந்தது. அதை எதிர்த்தே சில ஆயிரம் ஹாங்காங் வாசிகள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். . ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டம் அமைதியாக இடம்பெற்று இருந்தாலும் பின்னர் சிலர் வன்முறையில் […]

மீண்டும் அமெரிக்க பாகங்கள் Huaweiக்கு

சுமார் 6 கிழமைகளுக்கு முன்னர் Huawei என்ற சீன தொழில்நுட்ப நிறுவனம் மீது ரம்ப் அரசு தடை விதித்து இருந்தது. அந்த தடையின்படி அமெரிக்க நிறுவனங்கள் Huawei நிறுவனத்துக்கு எந்தவொரு hardware, software களை விற்பனை செய்யக்கூடாது. . ஆனால் அண்மையில் சீன ஜனாதிபதியை ஜப்பானில் இடம்பெற்ற G20 அமர்வில் சந்தித்த ரம்ப் தனது கொள்கையை மாற்றிக்கொண்டார். தான் Huawei மீது விதித்த தடையை தற்போது இடைநிறுத்தி உள்ளார். . Apple தவிர்ந்த ஏனைய smart phone […]