Putin, Xi யுடன் கிம் நெருக்கம், ரம்புக்கு அழுத்தம்

ரஷ்ய ஜனாதிபதி பூட்டின் (Putin) மற்றும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் (Xi JinPing) ஆகியோருடன் நெருக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் வடகொரிய தலைவர் கிம் அமெரிக்க ஜனாதிபதி ரம்புக்கு அரசியல் அழுத்தம் வழங்கியுள்ளார். . நேற்று வியாழன் கிம் ரஷ்யாவின் தூரக்கிழக்கு நகரான Vladivostok சென்று பூட்டினை சந்தித்து இருந்தார். இரு தரப்பும் பேச்சுக்கள் நலமாக முடிந்தன என்று கூறியிருந்தன. . பின்னர் பெய்ஜிங் சென்ற பூட்டின் சீன ஜனாதிபதி சியை சந்தித்து வடகொரியா தொடர்பாக உரையாடி […]

Raqqa மீட்ப்பில் 1,600 பொதுமக்கள் பலி

IS குழுவிடம் இருந்து ராக்கா (Raqqa) என்ற ஈராக்கிய என்ற நகரை மீட்க அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மேற்கொண்ட விமான மற்றும் எறிகணை தாக்குதல்களுக்கு சுமார் 1,600 பொதுமக்கள் பலியாகி இருந்ததாக Amnesty போன்ற அமைப்புகள் கூறுகின்றன. இந்த அமைப்புகளின் விசாரணை அங்கு இடம்பெற்ற 200 தாக்குதல்களுக்கு குறைந்தது 1,000 பொதுமக்கள் பலியாகி உள்ளனர் என்கிறது. . ஆனால் அமெரிக்கா தமையிலான இராணுவ அணி தாம் 318 பொதுமக்களை மட்டுமே தவறுதலாக பலியாக்கியதாக கூறியுள்ளது. […]

யுத்த குற்ற மறைப்பில் அமெரிக்க இராணுவ அதிகாரிகள்

அமெரிக்காவின் Navy SEAL என்ற விசேட இராணுவ படைகளின் அதிகாரி (platoon leader) செய்த யுத்த குற்றங்களை (war crimes) இராணுவத்தின் மேல் அதிகாரிகள் மூடிமறைக்க முயன்றுள்ளனர் என்று இன்று வெளியிடப்பட்ட The New York Times பத்திரிகை செய்தி கூறியுள்ளது. இந்த குற்றங்களை கண்ட கீழ்மட்ட SEAL உறுப்பினர்கள் உண்மையை உயர் அதிகாரிகளுக்கு கூறியபோது, உண்மைகளை கூறிய SEAL உறுப்பினர்களே எச்சரிக்கப்பட்டனராம். . Navy SEAL commando படையின் platoon leader Edward Gallagher தம்மால் […]

ஈரான் எண்ணெய் மீதான தடை விதிவிலக்கு இரத்து

ஒபாமா காலத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்துக்கு இணங்கின. அந்த இணக்கப்படி ஈரான் அணு ஆயுதத்துக்கு பயன்படும் அணு வேலைகளை நிறுத்தியது. பதிலாக ஈரான் மீதான மேற்கு நாடுகளின் தடைகளும் நீக்கப்பட்டன. அப்போது ஈரான் நாள் ஒன்றுக்கு சுமார் 2.5 மில்லியன் பரல் எண்ணெய்யை ஒவ்வொரு நாளும் ஏற்றுமதி செய்தது. . ஆனால் பின் பதவிக்கு வந்த ரம்ப் தன்னிசையாக மேற்படி உடன்படிக்கையில் இருந்து வெளியேறி, ஈரானுக்கு எதிராக போர்க்கொடி […]

இலங்கை ஈஸ்டர் தாக்குதலுக்கு குறைந்தது 207 பேர் பலி

ஈஸ்டர் ஞாயிரான இன்று கிறீஸ்தவ தேவாலயங்களிலும், ஹோட்டல்களிலும் இடம்பெற்ற 6 குண்டு தாக்குதல்களுக்கு குறைந்தது 207 பேர் பலியாகியும், 450 பேர் காயமடைந்தும் உள்ளனர். மரணித்தோருள் குறைந்தது 36 பேர் அமெரிக்கா, சீனா, பிரித்தானியா (குறைந்தது 5 பேர்), இந்தியா, துருக்கி, டென்மார்க், நெதர்லாந்து, போர்த்துக்கல் ஆகிய நாடுகள் உட்பட்ட அந்நிய நாடுகளின் பிரசைகள். . இன்று காலை சுமார் 8:45 மணியளவில் இடம்பெற்ற ஒரேநேர தாக்குதல்கள் கொழும்பு St. Anthony’s Shrine, நீர்கொழும்பு Sebastian’s Church, […]

வடகொரிய தூதரக தாக்குதல் பின்னணியில் CIA?

கடந்த பெப்ருவரி மாதம் 22 ஆம் திகதி ஸ்பெயின் (Spain) நாட்டில் உள்ள வடகொரிய தூதுவரகம் மீது இனம் தெரியாத சுமார் 10 பேர் கொண்ட குழு ஒன்று தாக்குதல் ஒன்றை நிகழ்த்தி இருந்தது. தரமான திட்டத்துடன் துப்பாக்கிகள், கத்திகள் கொண்டு அரங்கேற்றிய இந்த தாக்குதலில் அங்கிருந்த பல முக்கிய ஆவணங்கள் அபகரித்து செல்லப்பட்டு இருந்தது. . முதலில் இது கொள்ளை நோக்கம் கொண்ட தாக்குதல் என்று கருதப்பட்டாலும், பின்னர் இந்த தாக்குதல் அரசியல் நோக்கம் கொண்டது […]

அமெரிக்க கூரையில் 18 அடி மலைப்பாம்பு

அமெரிக்காவின் Michigan மாநிலத்தில் உள்ள Detroit நகரத்து வீட்டு கூரை ஒன்றில் தோன்றிய 18 அடி நீள மலைப்பாம்பு (python) அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Juliet என்ற பெயரை கொண்ட இந்த மலைப்பாம்பு ஒருவரின் வளர்ப்பு பிராணி என்பது பின்னர் தெரிய வந்துள்ளது. . உரிமையாளர் Devin Jones-White பாம்பின் கூட்டை முறையாக மூடாத நிலையிலேயே இந்த பாம்பு கூட்டைவிட்டு வெளியேறியுள்ளது. அதை அறிந்த சுற்றுப்புற நாய்கள் குறைக்க, பாம்பு கூரைக்கு எறியுள்ளது. அப்போது […]

இரண்டு UAE நபர்களை துருக்கி கைது

இரண்டு United Arab Emirates (UAE) நபர்களை துருக்கி கைது செய்துள்ளதாக துருக்கியின் அரச செய்தி நிறுவனமான Anadolu இன்று வெள்ளிக்கிழமை கூறி உள்ளது. துருக்கியில் நிலைகொண்டுள்ள இவர்கள் இருவரும் UAE சார்பில் உளவு வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியே கைது செய்யப்பட்டு உள்ளனர். . அத்துடன் இவர்களுக்கும், ஜமால் கசோகி என்பவர் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டமைக்கும் தொடர்பு உண்டதா என்பதையும் துருக்கி விசாரணை செய்கிறது. . துருக்கிக்கும், UAE க்கும் இடையே […]

அடுத்த கிழமை பூட்டின்-கிம் சந்திப்பு?

அடுத்த கிழமை ரஷ்யாவின் ஜனாதிபதி பூட்டினும் (Vladimir Putin), வடகொரியாவின் தலைவர் கிம்மும் (Kim Jong Un) சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பு Vladivostok என்ற வடகொரியாவின் எல்லைக்கு அருகே உள்ள ரஷ்ய நகரில் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. . கிம்முக்கான அழைப்பை பூட்டின் கடந்த வருடம் விடுத்திருந்தார். அமெரிக்க ஜனாதிபதி ரம்பும் இரண்டு தடவைகள் கிம்மை சந்தித்து இருந்தார். ரம்புடனான சந்திப்புகள் குறிப்பிடக்கூடிய முன்னேற்றம் எதையும் வழங்கவில்லை. . ரஷ்யாவின் விமான தாயாரிப்பு மற்றும் […]

முன்னாள் பெரு ஜனாதிபதி சுட்டு தற்கொலை

தென் அமெரிக்க நாடான பெருவின் (Peru) முன்னாள் ஜனாதிபதி Alan Garcia தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார். ஊழல் தொடர்பாக இவரை கைது செய்ய அதிகாரிகள் இவரின் வீட்டுக்கு சென்றபோதே முன்னாள் ஜனாதிபதி தற்கொலை செய்துள்ளார். . அதிகாரிகள் கைது செய்ய வந்ததை அறிந்த Alan Gracia ஒரு தொலைபேசி தொடர்பு எடுக்க விரும்புவதாக கூறி தனது வீட்டு அறை ஒன்றுள் சென்று, கதவை பூட்டிவிட்டு, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார். . 1949 […]