சீனாவில் அரச ஊழல் தடுப்பு உக்கிரம்

  சீனாவில் அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஊழலில் ஈடுபடுவதை தடுக்க தற்போதைய அரசு கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சாதாரண அதிகாரிகள் மட்டுமன்றி, பல உயர் அதிகாரிகளும் அங்கு தற்போது சிறை செல்கிறார்கள். சீனாவின் பெருளாதாரம் வேகமாக வளர்ந்த காலத்தில் அங்கு அதிகாரிகள் இலகுவில் ஊழல் செய்திருக்க முடித்து. . Cai Xiyum என்ற முன்னாள் உயர் அதிகாரிக்கு இன்று 12 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Sinochem என்ற அரச இரசாயன பொருட்களுக்கான அமைச்சின் […]

200 மில்லியன் Huawei smartphone விற்பனை

அமெரிக்கா, அஸ்ரேலியா, பிரித்தானியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் சீனாவின் Huawei (ஹுஆவெய்) மீது தடைகளை விதித்திருந்தும், அந்நிறுவனம் இந்த வருடம் 200 மில்லியன் smartphone களை விற்பனை செய்து உலக அளவிலான smartphone விற்பனையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. . சில வருடங்களுக்கு முன் மிக சிறிய தொகை smartphone களை விற்பனை செய்திருந்த Huawei வேகமாக வளர்ந்து வந்திருந்தது. விரைவில் iPhone தயாரிக்கும் Apple நிறுவனத்தை மூன்றாம் இடத்துக்கு தள்ளியது Huawei. முதலாம் இடத்தில் தற்போதும் […]

சனி சுனாமியின் வியத்தகு காரணி

சனிக்கிழமை இந்தோனேசியாவில் இடம்பெற்ற சுனாமிக்கு சுமார் 280 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். வழமையாக சுனாமி ஆபத்துக்களை முன்னறிந்து எச்சரிக்கும் நவீன நுட்பங்கள் சனிக்கிழமை சுனாமியை முன்னறிந்து எச்சரிக்கவில்லை. உண்மையில் தற்போதைய முன்னறிவு நுட்பங்கள் சனிக்கிழமை இடம்பெற்ற வகை சுனாமியை அறியும் ஆற்றலை கொண்டிருக்கவில்லை. . பெரும்பாலான சுனாமிகள் கடலுள் அல்லது கடலை அண்டிய பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கத்தினால் உருவாக்கப்படுபவையே. உலகம் எங்கும் நிலநடுக்கத்தை அறியும் வகையில் பல்லாயிரம் அதிர்வை அளக்கும் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. ஒரு இடத்தில் […]

ஜப்பான் பிறப்பு 120 வருட குறைவு

இந்த வருட ஜனவரி மாதம் முதல், அக்டோபர் மாதம் வரையான காலத்தில் 921,000 குழந்தைகள் மட்டுமே ஜப்பானில் பிறந்துள்ளனர். இந்த தொகை கடந்த 120 வருட தொகைகளில் மிக குறைந்த தொகையாகும். இத்தொகை கடந்த வருட தொகையிலும் 25,000 குறைவு. . 1989 ஆண்டுடன் ஒப்பிடுகையில், தற்போதைய பிறப்பு அளவு சுமார் 30% ஆல் குறைந்துள்ளது. அதாவது சுமார் 30 வருடங்களில் பிறப்பு 30% ஆல் குறைந்துள்ளது. . அதேவேளை முதியோர்களை பெருமளவு கொண்ட ஜப்பானில் மரணிப்போர் […]

ரம்ப் அவையின் இறுதி வல்லமையும் வெறியேற்றம்

அமெரிக்க ஜனாதிபதி ரம்பின் அவையில் இருந்த வல்லமை கொண்ட இறுதி நபரும் தனது பதவியை விட்டு விலகுகிறார். கடந்த இரண்டு வருடங்களாக பாதுபாப்பு செயலாளராக (US Defense Secretary) இருந்த ஜெனரல் Jim Mattis வரும் பெப்ருவரி மாத இறுதியுடன் தனது பதவியை விட்டு விலகுவதாக கூறியுள்ளார். . ரம்புடம் இணைந்து தொழில் புரிய முடியாத பல தரமான உறுப்பினர்கள் ஏற்கனவே ரம்பை விட்டு விலகி இருந்தனர். சிலர் பின்னர் ரம்பால் வசைபாடப்பட்டும் இருந்தனர். . பல […]

சிரியாவிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா

சிரியாவில் நிலைகொண்டிருந்த சுமார் 2,000 அமெரிக்க விசேட படையினர் அங்கிருந்து விரைவில் வெளியேறவுள்ளதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது. IS குழுவை அழிக்கவென்று அங்கு சென்ற அமெரிக்க படைகளை ரம்ப் திடீரென திருப்பி அழைப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. . அமெரிக்கா சிரியாவுள் IS குழுவை அழிக்க என்று கூறி சென்றாலும், சிரியாவின் அரசை அழிப்பது, சிரியாவுள் ஈரானின் செல்வாக்கை அழிப்பது, Kurd குழுக்களுக்கு ஆதரவு வழங்குவது போன்ற உள் நோக்கங்களையும் அமெரிக்கா கொண்டிருந்தது. . அமெரிக்காவின் இந்த […]

இஸ்ரேல் துறைமுகம் சீனாவுக்கு, அமெரிக்கா விசனம்

015 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனது மிக பெரிய துறைமுகமான ஹைபாவை (Haifa) சீனாவுக்கு 25 வருட குத்தகைக்கு வழங்கி இருந்தது. இஸ்ரேலின் போக்குவரத்து அமைச்சும், சீனாவின் Shanghai International Port Group நிறுவனமும் இணைந்து இந்த துறைமுகத்தை சீனாவின் Belt and Road திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய இணங்கின. . இங்கு சீனா $2 பில்லியன் முதலீட்டைஇதில் செலவிடவுள்ளது. பதிலுக்கு சீனா 25 வருடங்களுக்கு இந்த துறைமுகத்தின் பெரும்பான்மை உரிமையை கொண்டிருக்கும். . இந்த […]

அமெரிக்க Goldman Sachs மீது மலேசியா வழக்கு

அமெரிக்காவின் மிகப்பெரிய நிதி நிறுவனமான Goldman Sachs மீது புதிய மலேசிய அரசு நட்டஈட்டு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. முன்னைய அரசின் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற 1MDB ஊழலுக்கு Goldman Sachs உதவி செய்துள்ளது என்றே மலேசிய அரசு குற்றம் சுமத்தி உள்ளது. மலேசிய அரசு நட்டஈடாக சுமார் $2.7 பில்லியன் தொகையை கேட்டுள்ளது. . 2012 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையான காலத்தில் மலேசியாவின் அபிவிருத்திக்கு பயன்படுத்த என்று கூறி […]

சீனாவில் முழுமை பெற்ற முதல் Boeing 737 MAX

இன்று சனிக்கிழமை அமெரிக்காவின் Boeing விமான தயாரிப்பு நிறுவனம் முதல் முறையாக சீனாவில் முழுமை ஆக்கிய 737 MAX விமானத்தை Air China சேவைக்கு கையளித்துள்ளது. அமெரிக்காவின் Boeing விமான தயாரிப்பு நிறுவனம் அமெரிக்காவுக்கு வெளியே தனது விமான தயாரிப்பின் இறுதி பணிகளை (completion work) செய்வது சீனாவில் மட்டுமே. . Boeing நிறுவனமும் சீனாவின் Commercial Aircraft Corp of China (COMAC) இணைந்து இந்த இறுதி பணிகளில் ஈடுபட்டுள்ளன. அதற்காக Shanghai நகருக்கு அண்மையில் […]

எகிப்தில் 4,400 வருட பழைய கல்லறை

சுமார் 4,400 வருட பழைய கல்லறை (tomb) ஒன்று எகிப்தில் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு உள்ள மற்றைய புராதன கல்லறைகளுடன் ஒப்பிடுகையில் இந்த கல்லறை மிக குறைந்த பாதிப்புக்களையே கொண்டுள்ளது. திருடர்கள், மற்றும் எதிரிகளின் கண்களில் இந்த கல்லறை அகப்படாது இருந்தமையை காரணமாகலாம். . அக்காலத்தில் இப்பகுதி King Neferirkare ஆட்சியில் இருந்தது என்று கூறப்படுகிறது. இவரின் ஆட்சி கி.மு. 2500 முதல் 2300 வரையில் இருந்துள்ளது. . கைரோவுக்கு (Cairo) அண்மையில் உள்ள Saqqara கல்லறை தொகுதிகளில் […]