நியூசிலாந்தில் வெளிநாட்டார் வீடு கொள்வனவு தடை

இன்று புதன்கிழமை நியூசிலாந்தில் நடைமுறை செய்யப்பட்ட சட்டம் ஒன்றிப்படி வெளிநாட்டார் நியூசிலாந்தில் ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளை கொள்வனவு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஆஸ்ரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாட்டவர்களுக்கு இந்த தடை இல்லை. . சீனர் போன்ற செல்வம் மிக்க வெளிநாட்டவர் போட்டிக்கு அதிக பணம் செலுத்தி வீடுகளை கொள்வனவு செய்வதால் உள்ளூர் மக்கள் வீடுகளை கொள்வனவு செய்ய முடியாது உள்ளமையே இந்த புதிய சட்டத்துக்கு காரணம். . கடந்த 10 வருடத்துள் அந்நாட்டில் வீட்டு விலை சுமார் […]

ஐ. நா. பண பங்களிப்பில் சீனா இரண்டாம் இடம்

ஐக்கிய நாடுகள் சபைக்கு (UN general budget) அதிக பண பங்களிப்பை செய்யும் இரண்டாவது நாடாக சீனா இடம்பெறவுள்ளது. 2019 ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையான ஐ. நா. செலவுகளின் 12.01% தொகையை சீனா வழங்கவுள்ளது. . இதுவரை இரண்டாம் இடத்தில் இருந்த ஜப்பான் 2019-2021 காலத்தில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்படும். 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையான காலத்தில் ஐ. நா. செலவுகளின் 9.68% தொகையை ஜப்பானும், 7.92% […]

இத்தாலியில் மேம்பாலம் உடைந்து 22 பேர் பலி

இத்தாலியில் வாகனங்கள் ஓடும் மேம்பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் குறைந்தது 22 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியின் Genoa என்ற நகரில் உள்ள Morandi Bridge என்ற மேம்பாலமே இவ்வாறு உடைந்து வீழ்ந்துள்ளது. இன்று செவ்வாய் வீசிய கடும் புயலே இந்த உடைவுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. . சுமார் 80 மீட்டர் நீளமான உடைந்த மேம்பால துண்டு 50 மீட்டர் கீழே உள்ள புகையிரத பாதையில் வீழ்ந்தபோது அந்த பாலத்தில் பயணித்த வாகனங்களும் கூடவே வீழ்ந்துள்ளன. […]

காஸ்பியன் கடலில் ஐந்து நாடுகள் இணக்கம்

காஸ்பியன் கடலை சூழவுள்ள ஐந்து நாடுகளும் இன்று ஞாயிறு அக்கடலுள் எல்லைகளை தீர்மானிக்க இணங்கி உள்ளன. ரஷ்யா, ஈரான், அஜேபையான் (Azerbaijan), கஜகஸ்தான் Kazakhstan), ரேர்க்மென்ஸ்ரான் (Turkmenistan) ஆகிய ஐந்து நாடுகளுமே காஸ்பியன் கடலை பங்கிட சுமார் 20 வருட பேச்சுவார்த்தைகளின் பின் இணங்கி உள்ளன. . USSR காலத்தில் காஸ்பியன் கடல் ரஷ்யா, ஈரான் ஆகிய இரண்டு நாடுகளால் மட்டுமே சூழ்ந்திருந்தது. USSR உடைவின் பின் மற்றைய 3 நாடுகளும் தோன்றி உள்ளன. . மேலும் […]

சூரியனை நோக்கி நாசாவின் விண்கலம்

நேற்று சனிக்கிழமை அமெரிக்காவின் நாசா (NASA) சூரியனை நோக்கி விண்கலம் (probe) ஒன்றை ஏவி உள்ளது. Parker Solar Probe என்ற இந்த விண்கலம் புளோரிடா (Florida) மாநிலத்தின் Cape Canaveral தளத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது. . இந்த விண்கலமே சூரியனுக்கு மிக அருகாக செல்லவுள்ள முதல் விண்கலமாகும். சூரியனுக்கு அருகில் வெப்பநிலை சுமார் 555,000 C என்று கூறப்படுகிறது. அதனால் இந்த விண்கலம் சூரியனில் இருந்து சுமார் 6 மில்லியன் km தொலைவிலேயே எரிந்து பயனற்று […]

துருக்கி நாணயம் பாரிய வீழ்ச்சி

துருக்கி (Turkey) நாணயமான லிரா (lira) இன்று நாணயமாற்று சந்தையில் பாரிய வீழ்ச்சி அடைந்துள்ளது. துருக்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ரம்புக்கும் இடையே இடம்பெற்றுவரும் முறுகல் நிலை காரணமாகவே துருக்கியின் நாணயம் வீழ்ச்சி அடைந்துள்ளது. துருக்கியில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அலுமியத்துக்கு 20% மேலதிக இறக்குமதி வரியும், இரும்புக்கு 50% மேலதிக வரியும் அறவிடப்போவதாக ரம்ப் கூறிய பின்னரே லிரா வீழ்ந்துள்ளது. . Andrew Brunson என்ற அமெரிக்க கிறீஸ்தவ ஆயரை துருக்கி 2016 ஆம் ஆண்டு […]

சவுதியின் குண்டுக்கு யெமனில் 45 மாணவர் பலி

இன்று வியாழன் சவுதி அரேபியாவின் தலைமையிலான இராணுவ அணி யெமனில் (Yemen) நடாத்திய விமான தாக்குதலுக்கு 45 மாணவர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் மேலும் சுமார் 43 மாணவர் காயம் அடைந்தும் உள்ளனர். . மாணவர்களை ஏற்றி சென்ற பாடசாலை பஸ் ஒன்று மீது செய்யப்பட்ட குண்டு தாக்குதலே மாணவர்கள் பலியாக காரணமாக இருந்துள்ளது. இந்த சிறுவர்கள் 10 வயது முதல் 13 வயதுடையோர் ஆவர். . அதேவேளை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மரணித்தோரில் குறைந்தது […]

முற்றிவரும் கனடா, சவுதி முறுகல்

கனடிய அரசும், சவுதி அரசும் கடந்த சில நாட்களாக கருத்து போரில் ஈடுபட்டுள்ளன. அந்த போர் நாளாந்தம் முற்றி வருகிறது. . அண்மையில் சவுதி அரசு Samar Badawi என்ற உரிமைகளுக்காக போராடும் பெண்ணை சிறையில் அடைத்திருந்தது. அதை கனடா கண்டித்திருந்தது. அதனாலேயே சவுதி கோபம் கொண்டுள்ளது. சவுதியின் உள்நாட்டு விடயங்களுள் கனடாவே அல்லது வேறு ஒரு நாடோ தலையிடுவதை எதிர்க்கிறது சவுதி. . Samar Badawi என்பவர் Raif Badawi என்பவரின் சகோதரி ஆவார். சவுதி அரசை […]

அமெரிக்காவின் செவ்வாய் வரிக்கு சீனா புதன் வரி

அமெரிக்காவின் ரம்ப் அரசு நேற்று செய்வாய் மீண்டுமொரு புதிய இறக்குமதி வரியை (tariffs) சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு விதித்திருந்தது. அதற்கு பதிலடியாக சீனா இன்று புதன் மீண்டும் ஒரு புதிய இறக்குமதி வரியை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதித்துள்ளது. . செய்வாய் அமெரிக்கா புதிதாக நடைமுறை செய்த $16 பில்லியன் வரிக்கு நிகராக சீனாவும் $16 பில்லியன் பெறுமதியான அமெரிக்க பொருட்களுக்கு புதிய வரியை நடைமுறை செய்கிறது. இருதரப்பு வரிகளும் […]

ஈரான் மீது அமெரிக்கா முதல்கட்ட பொருளாதார தடை

இன்று செய்வாய் முதல் (00:01 EDT, New York நேரம்) முதல் அமெரிக்காவின் ஈரான் மீதான முதல் கட்ட பொருளாதார தடை நடைமுறைக்கு வந்துள்ளது. இரண்டாம் கட்ட பொருளாதார தடை, குறிப்பாக எண்ணெய் வளம் மீதான தடை, நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைமுறைக்கு வரும். . அமெரிக்காவின் இந்த தடை அமெரிக்க நிறுவனங்கள் ஈரானுடன் வர்த்தக நடவடிக்கைகள் செய்வதை தடுப்பது மட்டுமன்றி, அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் பிற நாட்டுகளின் நிறுவனங்கள் ஈரானுடன் வர்த்தகம் செய்வதையும் […]