ஜேர்மனியில் COவுக்கு 6 இளைஞர் பலி?

ஜேர்மனியின் Arnstein நகரில் 6 இளைஞர்கள் carbon monoxide (CO) வுக்கு பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பலியானவர்கள் அனைவரும் 18, 10 வயது உடையவர் என்றும் கூறப்படுகிறது. . ஒரு வீட்டின் மகளும், மகனும், வேறு 4 இளஞர்களும் கடந்த சனி அன்று தமது வீட்டின் குடில் ஒன்றில் party ஒன்றை நடாத்தி இருந்தார்கள். ஆனால் தனது மகனும், மகளும் மறுநாள் வீடு வராததை அறிந்த தகப்பனார் தமது குடிலை சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு […]

கனடிய மசூதியில் 6 பேர் சுட்டுக்கொலை

கனடாவின் கியூபெக் மாகாணத்து தலைநகரான Quebec Cityயில் உள்ள மசூதி ஒன்றில் ஞாயிறு இரவு நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதல் ஒன்றுக்கு 6 பேர் பலியாகியும், 8 காயமடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்கு காரணியானவர் என்று கருதப்படும் இருவர் கைதும் செய்யப்படு உள்ளனர் என்று போலீசார் கூறியுள்ளனர். . ஞாயிறு இரவு சுமார் 8:00 மணியளவில் Quebec Cityக்கு புறநகராக உள்ள Sainte Foy பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் 80 முதல் 100 வரையான முஸ்லிம்கள் […]

$30 பில்லியனுக்கு சீன Semiconductor நிறுவனம்

சீன அரச ஆதரவுடன் இயங்கும் Tsinghua Unigroup என்ற தொழில்நுட்ப நிறுவனம் $30 பில்லியன் செலவில் புதியதோர் semiconductor தயாரிப்பு நிறுவனம் ஒன்றை அமைக்கவுள்ளது. இந்த வகை semiconductor chipகள் computers, smart phones, digital camera போன்ற உபகரணங்களில் பயன்படுத்தப்படும். . தற்போது உலக அளவில் இவ்வகை பொருட்க்களுக்கான சந்தையை அமெரிக்காவின் Intel, Qualcomm போன்ற நிறுவனங்களே ஆக்கிரமித்து வந்தன. . கடந்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி விஞ்ஞான ஆய்வு அமைப்பு ஒன்று semiconductor உலகில் […]

Gambiaவுள் நுழைந்தது Senegal இராணுவம்

வியாழன் அன்று தாம் Gambia நாட்டுள் நுழைந்துள்ளதாக Senegal இராணுவம் அறிவித்துள்ளது. Senegal இராணுவ கேணல் Abdou Ndiaye இந்த செய்தியை கூறியுள்ளார். தாம் அண்மையில் Gambia நாட்டுள் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி Adama Barrow வுக்கு ஆதரவு தெரிவித்தே இவாறு தமது இராணுவத்தை Gambiaவுள் நகர்த்தியதாக Senegal கூறியுள்ளது. . கடந்த டிசம்பர் மாதம் Gambiaவில் இடம்பெற்ற தேர்தலில் Adama Barrow ஜனாதிபதியாக வெற்றி பெற்றிருந்தார். அவரின் வெற்றியை தற்போதைய ஜனாதிபதி Yahya Jammeh ஏற்று […]

ஜேர்மனியுடன் மோதும் டிரம்ப்

டிரம்ப் இதுவரை தெரிவு செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிகளில் மிகவும் வித்தியாசமானவர், விசித்திரமானவர். அளந்து பேசுவது, ஆய்ந்து பேசுவது, நிதானமாக பேசுவது எல்லாம் இவர் பழக்கம் அல்ல. அதையே அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்பும் செய்யகிறார். டிரம்பின் வசைபாடலில் தற்போது சிக்கியுள்ளது ஜேர்மனி. . NATO அணி பயன்பாட்டில் ஓர் காலம்கடந்த அமைப்பு (obsolete) என்கிறார் டிரம்ப். பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியது நல்ல விடயம் (great) என்கிறார் டிரம்ப். ஜேர்மனியின் தலைவர் Merkelலின் அகதிகள் ஆதரவு […]

இஸ்ரேல், பாலஸ்தீனர் இன்றி 70 நாடுகள் பேச்சுவார்த்தை

உலகிலேயே அதிககாலம் தீர்வுக்காக பேசப்பட்டு, ஆனால் தீர்வு எதையும் இதுவரை அடையாத விவகாரம், இஸ்ரேல்-பாலஸ்தான் மோதல். கண்மூடித்தனமான இஸ்ரேல் ஆதவு அரசியல்வாதிகள் அமெரிக்காவின் இரண்டு கட்சிகளுள்ளும் நிரம்பி இருப்பதால், அவர்களின் ஆத்ரவுகளுடன் இஸ்ரேல் தன் விருப்பப்படியேயே புதிய வீடுகளை பாலஸ்தீனியர்கள் நிலங்களில் நிரப்பி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலுக்கு தீர்வு அவசியம் இல்லாத ஒன்று. . ஆனாலும் பல உலக நாடுகள், குறிப்பாக அமெரிக்கா தவிர்ந்த ஏனைய மேற்கு நாடுகள் இஸ்ரேல் மீது படிப்படியாக அழுத்தம் கொடுக்க ஆரம்பித்து […]

சிங்கப்பூர் சிறை போகும் சுவிஸ் வாங்கியாளர்

சிங்கப்பூர் அரசு 1MDB என்ற விடயம் தொடர்பாக விசாரணைகள் நடாத்தி வந்திருந்தது. அதன் ஒரு அங்கமாக சுவிஸ் நாட்டு பிரசையும், சுவிஸ் நாட்டு வங்கியான Falcon Private Bankகின் சிங்கப்பூர் கிளையில் பணிபுரிந்தவருமாகிய Jens Fred Sturzenegger குற்றாவளியாக காணப்பட்டு உள்ளார். புதன்கிழமை சிங்கப்பூர் நீதிமன்றில் கூறப்பட்ட கூறில், இந்த சுவிஸ் வாங்கியாளர் 1MDB தொடர்பாக பொய்யான தகவல்களை சிங்கப்பூர் விசாரணைகளுக்கு வழங்கியுள்ளார். இவருக்கு 28-கிழமை சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. அத்துடன் இவருக்கு $89,000 தண்டமும் […]

டிரம்ப்பை திருப்திப்படுத்த கனடிய ரூடோ நகர்வு

அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதியாக வரவுள்ள டொனால்ட் டிரம்ப்பை (Donald Trump) திருப்திப்படுத்தும் நோக்கில் தனது அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ளார் கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ (Justin Trudeau). இதுவரை கனடிய வெளிவிவகார அமைச்சராக Stephane Dion என்பவரே செயல்பட்டு வந்துள்ளார். Dion டிரம்ப் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கள் காரணமாகவே தற்போது, டிரம்ப் அமெரிக்காவில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில், வெளியுறவு பதவியை இழந்துள்ளார். . அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற காலத்தில், டிரம்ப் பெரும் முஸ்லீம் எதிர்ப்பு […]

ஐரோப்பாவில் அமெரிக்கா படை குவிப்பு

ஒபாமா அரசு நூற்றுக்கணக்கான அமெரிக்க காலால் படையினரை ஐரோப்பா அனுப்பியுள்ளது. இந்த படை நகர்வில் சுமார் 3500 அமெரிக்க காலால் படையினரும், அவர்களுடன் 87 tanks, 18 howitzer artillery, 419 humvee வாகனங்கள், 144 Bradley வகை யுத்த வாகனங்கள் உட்பட வேறு பல யுத்த வாகனங்களும் ஐரோப்பா சென்றுள்ளன. ஜேர்மனியில் தற்போது இறக்கப்படும்  போலந்து போன்ற  அனுப்பப்படும். . ஹில்லாரி கிளிண்டனின் தோல்விக்கு ரஷ்யாவே காரணம் என்று கருதும் ஒபாமா அரசு வேகமாக இந்த […]