Bankruptcyஆகும் அமெரிக்காவின் Detroit நகரம்

முன்னொரு காலத்தில் Detroit அமெரிக்காவின் முன்னணி நகரங்களில் ஒன்று. ஆனால் motor city என்று அழைக்கப்பட்ட அந்த நகரம் US$ 18 பில்லியன் கடன் காரணமாக bankruptcyஆகவுள்ளது. அதற்கு ஏற்ப அந்த நகர் Chapter 9 பாதுகாப்புக்கு வேண்டிய சட்ட நடவடிக்கைகளை ஆடி 18 அம்ம திகதி எடுத்துள்ளது.

இந்த நகரை ஒரு காலத்தில் செல்வத்தில் மிதக்க வைத்த GM (General Motors), Chrysler இரண்டும் 2009 இல் Chapter 11 bankruptcy சென்று பின் $80 பில்லியன் அரச கடன் மூலம் மறுபிறப்பு எடுத்திருந்தன.

GM, Chrysler போன்ற அமெரிக்க வாகன உற்பத்தி நிறுவனங்கள் கொடிகட்டி பறந்த1950 களில் இந்த நகரில் சுமார் 2 மில்லியன் (2,000,000) மக்கள் வாழ்ந்திருந்தனர். ஆனால் இப்போது சுமார் 700,000 மக்கள் தொகையே உள்ளது. சனத்தொகை குறைவு, வீட்டு பெறுமதி குறைவு, வேலைவாய்ப்பு குறைவு எல்லாம் நகருக்கு கிடைக்கும் வரி வருமானத்தை அதிகம் பாதித்துள்ளது.

தட்போதை கணிப்புகளின்படி பொதுவாக அமெரிக்காவில் பொலிசார் அழைக்கப்பட்ட இடமொன்றுக்கு 11 நிமிடங்களுள் வருவர். ஆனால் Detroit இல் 58 நிமிடங்கள் எடுக்கும். சேவை குறைபாடுகள், அதிகரித்த வன்முறைகள் என்பனவே காரணம். இங்கு ஆயிரக்கணக்கில் பாழடைந்த வீடுகள், பயன்படுத்தப்படாத கட்டிடங்கள் எல்லாம் உள்ளன.