Bitcoin என்ற digital நாணயம்

Bitcoin

தற்போது நாணய சந்தையை உலுக்கி வருகிறது bitcoin என்ற மின்னியல் நாணயம் (digital currency). சிலர் இதை ஒருவகை முக்கோண சீட்டு என்கின்றனர். வேறு சிலர் இதுதான் வருங்கால நாணயம் என்கின்றனர். இந்த நாணயம் ஏனைய நாணயங்கள் போல் அச்சடிக்கப்படுவது இல்லை. இந்த நாணயம் எந்தவொரு நாட்டின் மத்திய வங்கியாலும் மேற்பார்வை செய்யப்படுவதும் இல்லை. இந்த நாணயம் எந்தவொரு நாட்டின் பொருளாதாரத்தை பிரதிபலிப்பதுவும் இல்லை. இது ஒரு digital currency.
.
இந்த நாணய முறை Satoshi Nakamoto என்ற புனைபெயர் கொண்ட ஒருவரால் 2009 ஆம் ஆண்டு நடைமுறை செய்யபட்டது. இவரின் உண்மையான அடையாளம் இதுவரை அறியப்படவில்லை. இரண்டு முறைகளில் Bitcoin நாணயத்தை ஒருவர் பெறலாம். ஒன்று தோண்டுதல் மூலம் பெறல் (mining). மற்றையது ஏற்கனவே Bitcoin உள்ள ஒருவரிடம் இருந்து அமெரிக்காவின் டாலர் போன்ற உண்மையான நாணயம் வழங்கி பெறல்.
.
Mining முறை பலம் மிக்க கணனிகள் உதவியுடன், SHA-2 (Secure Hash Algorithm – 2) என்ற கணிப்பு படிமுறையை முறையை (algorithm) பயன்படுத்தியும் பெறப்படும். Bitcoin நாணயங்களை பல கணணிகள் கூட்டாக இயங்கி நடைமுறைப்படுத்தும் coinbase கண்காணிக்கும். bitcoin நாணயம் ஒன்றின் உத்தரவாதத்தை coinbase உறுதி செய்யும்.
.
Mining மூலம் மொத்தம் 21 மில்லியன் bitcoin நாணயங்கள் மட்டுமே பெறப்படும். அதாவது இறுதியில் உலகில் மொத்தம் 21 மில்லியன் bitcoin நாணயங்கள் மட்டுமே இருக்கும். சுமார் 2140 ஆம் ஆண்டில் இந்த mining நிறைவு பெறும் என்று கணிக்கப்படுள்ளது.
.
Bitcon உரிமையாளர் public key, private key என்ற encryption முறைமையை இந்த நாணய பரிமாற்றத்துக்கு பயன்படுத்துவர். உரிமையாளர் ஒருவர் தனது bitcoin நாணயத்துக்கான private keyயை தொலைத்தால், அவரின் நாணயங்கள் எவராலும் பயன்படுத்தப்பட முடியாது தொலைந்துவிடும். Hackers bitcoin நாணயத்தை களவாடவும் முடியும். 2014 ஆம் ஆண்டில் ஜப்பானை தளமாக கொண்ட Mt Gox என்ற bitcoin நாணயமாற்று முகவர் நிலையம் தம்மிடம் உள்ள $500 மில்லியன் பெறுமதியான bitcoin களவாடப்பட்டதாக கூறியிருந்தது.
.
அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சாதாரண வங்கிகள் இந்த bitcoin நாணயத்தை கையாள்வது இல்லை. இது வங்கிகளால் ஒரு சட்டவிரோத நாணயமாகவே கருதப்படுகிறது. தாய்லாந்து, சீனா, ரஷ்யா, வியட்நாம், பொலிவியா, பங்களாதேசம், கொலம்பிய ஆகிய நாடுகள் bitcoin நாணயத்தை தடை செய்த முன்னணி நாடுகளாக உள்ளன.
.
Bitcoin நாணய பெறுமதியும் அதிகம் தளம்பும் இயல்பை கொண்டது. 2011 ஆம் ஆண்டில் சுமார் $US 0.30 பெறுமதியை கொண்டிருந்த bitcoin ஒன்று திடீர் என்று $32.00 பெறுமதிக்கு உயர்ந்து பின் $ 2.00 பெறுமதிக்கு வீழ்ந்திருந்தது. 2013 ஆம் ஆண்டில் $266.00 பெறுமதிக்கு உயர்ந்த இந்த நாணயம் பின்னர் $50.00 ஆக குறைந்திருந்தது. அதே ஆண்டில் நொவெம்பரில் இதன் பெறுமதி $1,242.00 ஆக உயர்ந்திருந்தது. 2014 ஆம் ஆண்டில் இதன் பெறுமதி $600.00 அளவில் இருந்தது. கடந்த மாதம் 28 ஆம் திகதி இந்த bitcoin ஒன்றின் பெறுமதி $US 10,000 வரையில் உள்ளது.
.
இந்த நாணயம் எந்தவொரு அரசின் கடுப்பாட்டிலும் இல்லாதபடியால் பாதாள உலகம் இந்த நாணயத்தை தமது பண கடத்தல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துகின்றன.
.
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற Robert Shiller என்பவரும், Joseph Stiglitz என்பவரும் இந்த bitcoin நாணயம் சட்டவிரோதமாக்கப்படல் வேண்டும் என்றுள்ளார்.
.