Goldman Sachs $7 பில்லியன் தண்டம் செலுத்தும்

Goldman Sachs $7 பில்லியன் தண்டம் செலுத்தும்

மலேசிய மக்களின் பொதுப்பணத்தில் ஆரம்பிப்பட்ட 1MDB முதலீட்டு திட்டத்தில் இருந்து மலேசிய அரசியல்வாதிகள் பெருமளவு பணம் கொள்ளையடிக்க உடந்தையாக இருந்த அமெரிக்காவின் முதலீட்டு வங்கியான Goldman Sachs தனது தவறுகளில் இருந்து விடுவிக்க சுமார் $3 பில்லியன் தண்டம் செலுத்த இன்று வியாழன் இணங்கி உள்ளது. அதனால் Goldman செலுத்தும் மொத்த தண்டம் சுமார் $7 பில்லியன் ஆக அதிகரித்து உள்ளது. கடந்த ஜூலை மாதம் மலேசியாவுக்கும் சுமார் $3.9 பில்லியன் தண்டம் செலுத்த Goldman இணங்கி இருந்தது. […]

Purdue Phrama $8 பில்லியன் தண்டம் செலுத்தும்

Purdue Phrama $8 பில்லியன் தண்டம் செலுத்தும்

அமெரிக்காவின் மருந்து தயாரிப்பு நிறுவனமான Purdue Pharma தனது OxyContin மருந்து விற்பனையில் செய்த குற்றங்களை ஏற்று, $8.3 பில்லியன் தண்டம் செலுத்தி, நிறுவனத்தையும் மூட இணங்கி உள்ளது. OxyContin சில நோயாளிகளின் நோக்களை குறைக்கும் மருந்தாகவே அங்கீகரிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நோய் எதுவும் இல்லாதோர் பலர் அதை போதையாக பயன்படுத்தி உள்ளனர். அதை அறிந்தும் இலாப நோக்கத்தை மட்டும் கொண்ட Purdue Pharma வைத்தியர்களை ஊக்கிவித்து OxyContin மருந்து விற்பனையை அதிகரித்து உள்ளது. இலாபத்தில் பங்கை […]

Google மீது அமெரிக்கா antitrust வழக்கு தாக்கல்

Google மீது அமெரிக்கா antitrust வழக்கு தாக்கல்

உலகின் மிகப்பெரிய இணைய தேடுதல் நிறுவனமான Google மீது அமெரிக்க மத்திய அரசும், 11 மாநிலங்களும் antitrust என்ற வழக்கை இன்று தாக்கல் செய்துள்ளன. பொதுமக்களின் வர்த்தக நலன்களுக்கு முரணாக தனியார் நிறுவனம் வளர்ந்து மக்களை கட்டுப்படுத்துவதை தவிர்க்கும் நோக்கில் அமெரிக்காவில் இயற்றப்பட்டதே antitrust சட்டம். உலகின் சுமார் 90% இணைய தேடுதல் Google மூலமே செய்யப்படுகிறது. அந்த ஆளுமையை பயன்படுத்தி Google தனக்கு போட்டியாக உள்ள வர்த்தகங்களை கட்டுப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. Google ஐ பயன்படுத்தி […]

சோழர் சாசனத்தை இந்தியா மீட்க முயற்சிகள்

சோழர் சாசனத்தை இந்தியா மீட்க முயற்சிகள்

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் இருந்து மேற்கே சென்ற சோழர் காலத்து சாசனத்தை நெதர்லாந்தின் Leiden University என்ற பல்கலைக்கழகத்தில் இருந்து இந்தியா மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. மேற்படி சாசனம் இரண்டு தொகுதிகளில் உண்டு. ஒன்று தமிழிலும் மற்றையது சமஸ்கிரதத்திலும் உள்ளன. மொத்தம் 21 செப்பு தகடுகளில் (copper plates) எழுதப்பட்ட இந்த சாசன தொகுதி பித்தளை bronze வளையத்தால் இணைக்கப்பட்டு உள்ளன. இவை ராஜேந்திர சோழனின் அரச முத்திரையை கொண்டுள்ளன. இவை அங்கிருந்த […]

வலுவடையும் தாய்லாந்து ஆர்ப்பாட்டங்கள், போக்குவரத்து முடக்கம்

வலுவடையும் தாய்லாந்து ஆர்ப்பாட்டங்கள், போக்குவரத்து முடக்கம்

கடந்த சில தினங்களாக தாய்லாந்தில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. அவற்றை தடை செய்ய அரசும் முயன்று வருகின்றது. சில பகுதிகளில் தற்போது பொது போக்குவரத்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டு உள்ளன. ஆர்ப்பாட்டம் செய்வோரின் நகர்வுகளை முறியடிக்கும் நோக்கில் போலீசார் 77 ரயில் நிலையங்களை மூடி உள்ளனர். அத்துடன் வீதி தடைகளையும் அமைத்து உள்ளனர். ஆனாலும் ஆர்ப்பாட்டம் செய்பவர்களின் தொகை கடந்த 4 தினங்களாக அதிகரித்து வருகின்றது. ஆர்ப்பாட்டம் செய்வோர் முன்னாள் இராணுவ அதிகாரியான பிரதமர் Prayuth […]

அமெரிக்க பல்கலைக்கழகத்தின் 50% படிப்பில் சீனாவே மையம்

அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான பென்டகன் (Pentagon) கீழ் இயங்கும் National Defense University என்ற பல்கலைக்கழகம் 2021 ஆம் ஆண்டுக்கான பாடங்களின் (curriculum) 50% பங்கு சீனாவை மையமாக கொண்டிருக்கவேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் Mark Esper வியாழக்கிழமை கூறியுள்ளார். வளரும் சீனாவை நேர்கொள்ள அமெரிக்காவுக்கு குறைந்தது 500 யுத்த கப்பல்கள் தேவை என்று Esper ஏற்கனவே கூறி இருந்தார்.அமெரிக்காவின் The Heritage Foundation என்ற நிபுணர்கள் அமைப்பின் அமர்வு ஒன்றில் பங்கொண்ட வேளையிலேயே Esper […]

சந்திரனிலும் காணி பிடிப்பு வருகிறது?

சந்திரனிலும் காணி பிடிப்பு வருகிறது?

கடந்த செவ்வாய்க்கிழமை (2020/10/13) அமெரிக்கா தலைமையில் 8 நாடுகள் நாசாவின் Artemis Accord என்ற இணக்கம் ஒன்றில் ஒப்பந்தம் இட்டுள்ளன. கூட்டாளி நாடுகளான மேற்படி எட்டு நாடுகள் மட்டுமே செய்துகொண்ட இந்த இணக்கத்தை ஒரு சர்வதேச இணக்கம் ஆக அறிமுகம் செய்யவும் அவர்கள் முனைகின்றனர். அமெரிக்கா தலைமையில் அஸ்ரேலியா, பிரித்தானியா, கனடா, இத்தாலி, ஜப்பான், Luxembourg, UAE ஆகிய நாடுகளே மேற்படி இணக்கத்தில் கையொப்பம் இட்டுள்ள நாடுகள். அமெரிக்கா வரைந்த இந்த இணக்கம் சந்திரன் போன்ற பூமிக்கு […]

பங்களாதேசத்துக்கு கீழே இந்திய தனிநபர் GDP

பங்களாதேசத்துக்கு கீழே இந்திய தனிநபர் GDP

2020 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் தனிநபர் GDP (per capita Gross Domestic Product) பங்களாதேசத்தின் தனிநபர் GDP யிலும் குறைவாக இருக்கும் என்று நேற்று செய்வாய் IMF கூறி உள்ளது.​ இந்திய பொருளாதாரம் மீதான IMF இந்த நேற்றைய கணிப்பு முன்னைய கணிப்பிலும் குறைவாக உள்ளது. 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி முடியவுள்ள இந்தியாவின் 2020 வர்த்தக ஆண்டுக்கான தனிநபர் GDP $1,877 ஆக மட்டுமே இருக்கும் என்கிறது IMF. […]

சைப்ரஸ் ‘golden passport’ வழங்கலை நிறுத்தியது

சைப்ரஸ் ‘golden passport’ வழங்கலை நிறுத்தியது

அண்மையில் Al Jazeera செய்தி நிறுவனத்தின் ஆய்வு கட்டுரை ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் கொண்ட சைப்ரஸ் (Cyprus) அந்நாட்டில் முதலீடு செய்யும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் செல்வந்தர்களுக்கு கடவுச்சீட்டு (passport) வழங்குவதை பகிரங்கப்படுத்தி இருந்தது. இந்த விவகாரங்களில் ஊழலும் இடம்பெற்று இருந்தன. அந்த ஆய்வு கட்டுரை காரணமாக தற்போது சைப்ரஸ் மேற்படி கடவுச்சீட்டு வழங்கலை இடைநிறுத்தி உள்ளது. நவம்பர் மாத 1 ஆம் திகதி முதல் இடைநிறுத்தம் நடைமுறைக்கு வரும். மேற்படி முறைமூலம் சுமார் […]

இலங்கைக்கு சீனா மேலும் $90 மில்லியன் நன்கொடை

இலங்கைக்கு சீனா மேலும் $90 மில்லியன் நன்கொடை

இலங்கைக்கு மேலும் $90 மில்லியன் நன்கொடை வழங்க சீனா முன்வந்துள்ளது. Yang Jiechi என்ற சீன வெளியுறவு அமைச்சு அதிகாரி வெள்ளிக்கிழமை இலங்கை பிரதமரை சந்தித்த பின்னரே இந்த நன்கொடை அறிவிப்பு வெளிவந்துள்ளது. Yang Jiechi இலங்கை சனாதிபதியையும் சந்தித்து உள்ளார். இந்த நன்கொடை வைத்திய, கல்வி, நீர் வழங்கல் துறைகளுக்கு பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இம்முறை IMF இன் உதவியை நாடாது சீனாவின் உதவியை நாடி உள்ளது இலங்கை. மேற்கு நாடுகள் IMF மூலம் கட்டுப்பாடுகளை […]