செங்கடல் பயணத்துக்கு ரஷ்யா, சீனா கூதியுடன் இணக்கம்

செங்கடல் பயணத்துக்கு ரஷ்யா, சீனா கூதியுடன் இணக்கம்

செங்கடல் ஊடு செல்லும் தமது கப்பல்கள் கூதி (Houthi) ஆயுத குழுவால் தாக்கப்படாமல் இருக்கும் வகையில் ரஷ்யாவும், சீனாவும் கூதியுடன் இணக்கம் ஒன்றை செய்துள்ளன. இஸ்ரேல்-காமாஸ் யுத்தம் ஆரம்பம் ஆகிய பின் கூதி ஆயுத குழு காசா மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் செங்கடல் ஊடு செல்லும் இஸ்ரேல், அமெரிக்க, பிரித்தானிய கப்பல்கள் மீது தாக்குதல்களை செய்து வருகிறது. அமெரிக்கா, பிரித்தானியா போன்ற மேற்கு நாடுகளும் கூதி மீது பதில் தாக்குதல்களை செய்து வருகின்றன. இதனால் பல […]

கோடைக்கு முன்னரே பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு

கோடைக்கு முன்னரே பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு

இந்தியாவின் தொழில்நுட்ப நிறுவனங்களின் மையமான பெங்களூரில் தண்ணீருக்கு பெரும் தட்டுப்பாடு தோன்றியுள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை உச்சம் அடைய  நிலைமை மேலும் மோசம் அடையும். அங்கு சுமார் 13,900 குழாய் கிணறுகள் உள்ளதாகவும் அதில் 6,900 கிணறுகள் முற்றாக வற்றி உள்ளதாக கூறப்படுகிறது. வற்றிய கிணறுகளில் சில 1,500 அடி ஆழமானவை. சுமார் 14 மில்லியன் மக்கள் வாழும் இந்த நகரில் நாள் ஒன்றுக்கு 2 பில்லியன் லீட்டர் நீர் தேவை. ஆனால் தற்போது […]

ஏறியவுடன் தரையிறங்கிய Srilankan Flight UL 173

ஏறியவுடன் தரையிறங்கிய Srilankan Flight UL 173

இன்று 19ம் திகதி அதிகாலை 1:13 க்கு கொழும்பில் இருந்து இந்தியாவின் பெங்களூர் நகர் நோக்கி செல்லவிருந்த Srilankan விமான சேவை UL 173 மேலேறி சில நிமிடங்களில் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளது. இயந்திர கோளாறே விமானம் பயணத்தை இடைநிறுத்த காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விமானம் பல தடவைகள் வானத்தில் வட்டமடித்த பின்னரே தரையிறங்கி உள்ளது. இந்த விமானம் Srilankan சேவையை செய்திருந்தாலும், இந்த விமானம் FitsAir விமான சேவைக்கு சொந்தமான Airbus […]

முதல் 100 மாசடைந்த நகர்களில் 83 இந்தியாவில்

முதல் 100 மாசடைந்த நகர்களில் 83 இந்தியாவில்

உலக அளவில் அதிகம் மாசடைந்த 100 நகரங்களில் 83 நகரங்கள் இந்தியாவில் உள்ளன என்கிறது IQAir என்ற அமைப்பு. அத்துடன் மேற்படி 100 நகர்களில் 99 நகர்கள் ஆசியாவில் உள்ளன என்றும் கூறப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி 1 மீட்டர் கனவளவு வளியில் 5 microgram க்கும் அதிகமான PM2.5 மாசு துகள்கள் இருந்தால் அந்த வளி சுவாசத்துக்கு ஆபத்தானது. ஆனால் மேற்படி 100 நகர்களில் உள்ள வளி 10 மடங்கு ஆபத்தானவை. மொத்தம் […]

மீண்டும் பூட்டின், மேற்குக்கு தலையிடி, சீனாவுக்கு நயம்

மீண்டும் பூட்டின், மேற்குக்கு தலையிடி, சீனாவுக்கு நயம்

பலமான அரசியல் போட்டிகளை நசுக்கி விரட்டிய பின் ரஷ்யா நிகழ்த்திய தேர்தலில் பூட்டின் 87% வாக்குகள் பெற்று மீண்டும் 6 ஆண்டுகளுக்கு சனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இம்முறையுடன் பூட்டின் 5 தடவை ஆட்சிக்கு வந்த சனாதிபதி ஆகிறார். அதனால் அமெரிக்கா உட்பட மேற்குக்கு மேலும் 6 ஆண்டுகள் தலையிடி நிறைந்த, யுத்த செலவுகள் அதிகரித்த காலமாக அமையும். நவம்பரில் இடம்பெறவுள்ள அமெரிக்க தேர்தலில் ரம்ப் வெற்றி பெற்றால் ஐரோப்பிய நாடுகளுக்கு, குறிப்பாக ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு பெரும் இடராக அமையும். […]

அயர்லாந்து அமெரிக்கர்களின் ஆதரவையும் இழக்கும் பைடென்

அயர்லாந்து அமெரிக்கர்களின் ஆதரவையும் இழக்கும் பைடென்

அமெரிக்காவில் வாழும் இஸ்லாமியர் மற்றும் அரபுகளின் ஆதரவை மட்டுமன்றி காசா யுத்தம் காரணமாக அமெரிக்காவில் வாழும் அயர்லாந்தினரின் (Irish) ஆதரவையும் சனாதிபதி பைடென் வேகமாக இழந்து வருகிறார். இந்த அயர்லாந்தினர் இஸ்ரேல் பலஸ்தீனருக்கு செய்யும் கொடுமைகளை பிரித்தானியர் தமக்கு  செய்த கொடுமைகளுடன் ஒப்பிடுகின்றனர். அயர்லாந்தே முதலில் பலஸ்தீனம் என்ற நாட்டை ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய நாடாகும். அயர்லாந்தில் சுமார் 80% மக்கள் இஸ்ரேல் காஸாவின் செய்வது genocide என்று கூறுகின்றனர். Irish Americans for Palestine என்ற அமைப்பு […]

பா.ஜ. கட்சிக்கு $726 மில்லியன் இரகசிய நன்கொடை

பா.ஜ. கட்சிக்கு $726 மில்லியன் இரகசிய நன்கொடை

இந்திய பிரதமர் மோதியின் பா.ஜ. கட்சிக்கு $726 மில்லியன் (60 பில்லியன் இந்திய ரூபாய்கள்) இரகசிய நன்கொடை (anonymous donations) என்று இந்திய தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். 2017ம் ஆண்டு மோதி அரசு electoral bonds என்ற அரசியல் கட்சிகளுக்கான நன்கொடை முறைமையை நடைமுறை செய்திருந்தது. இந்த முறைமை நன்கொடையை இரகசியமாக செய்ய வழிவகுக்கிறது. அதாவது நன்கொடை வழங்குபவரின் அல்லது வழங்கும் நிறுவனத்தின் பெயர் மறைத்து வைக்கப்படலாம். கடந்த மாதம் இந்திய உயர் நீதிமன்றம் electoral bonds […]

கனடிய CBC ஆவண படத்துக்கு இந்தியா தடை

கனடிய CBC ஆவண படத்துக்கு இந்தியா தடை

கனடாவின் அரச கூட்டுத்தாபன செய்தி சேவையான Canadian Broadcasting Corporation (CBC) கடந்த கிழமை வெளியிட்ட தொலைக்காட்சி ஆவண படம் ஒன்றை இந்தியாவில் வெளியிட மோதி அரசு தடை விதித்துள்ளது. கனடிய குடியுரிமை கொண்ட சீக்கிய பிரிவினைவாதி ஒருவர் அண்மையில் கனடிய சீக்கிய ஆலயம் ஒன்றுக்கு அருகில் சுட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த கொலையின் பின்னணியில் இந்தியா உள்ளது என்று கனடிய பிரதமர் இந்தியா மீது குற்றம் சாட்டியுள்ளார். இந்தியா கனடாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. Contract to […]

இன்றைய இந்தியர் 3 குழுக்களின் கலப்பு என்கிறது ஆய்வு

இன்றைய இந்தியர் 3 குழுக்களின் கலப்பு என்கிறது ஆய்வு

Priya Moorjani என்ற University of California (Berkeley) சனத்தொகை மரபணு ஆய்வாளரும் அவரின் குழுவும் செய்த ஆய்வு ஒன்று இன்றைய இந்தியர் 3 வெவ்வேறு குழுக்களின் கலப்பு என்று கூறுகிறது. இந்த ஆய்வு குழு 2,700 க்கும் அதிகமான இன்றைய இந்தியர்களின் மரபணுக்களை மேற்படி ஆய்வுக்கு பயன்படுத்தி உள்ளது. இந்த ஆய்வு Science என்ற ஆய்வு வெளியீட்டில் இடம்பெற்றுள்ளது. இந்த ஆய்வு இன்றைய இந்தியர் (1) பல பத்தாயிரம் ஆண்டுகளாக இப்பகுதியில் வாழ்ந்தவர்கள், (2) சுமார் […]

பர்மா Arakan ஆயுத குழுவை இந்திய பா.உ. சந்திப்பு

பர்மா Arakan ஆயுத குழுவை இந்திய பா.உ. சந்திப்பு

பர்மாவின் இந்திய எல்லையோரம் பர்மாவின் இராணுவத்துக்கு எதிராக போராடிவரும் Arakan Army என்ற  குழுவை இந்திய மிசோராம் மாநிலத்து Rajya Sabha பாராளுமன்ற உறுப்பினர் K. Vanlalvena சந்தித்துள்ளார். இந்திய-பர்மா எல்லைக்கு சென்ற இவர் பர்மாவின் Chin மாநிலத்தின் உள்ளே 12 km தூரம் சென்று Paletwa என்ற இடத்தில் Arakan குழுவை சந்தித்து உள்ளார். இவரின் பயணம் பர்மா ஊடான Kaladan Multi Modal Transit Transport Project (KMMTTP) என்ற இந்திய திட்டத்தை முன்னெடுப்பதே. IRCON […]