செவ்வாய் அமெரிக்காவில் Midterm தேர்தல்

வரும் செய்வாய்க்கிழமை, நவம்பர் 6 ஆம் திகதி, அமெரிக்காவின் midterm என்ற இடைக்கால தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலில் ரம்பின் கட்சி சில தோல்விகளை அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. . அமெரிக்காவில் நாலு வருடங்களுக்கு ஒரு தடவை ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவது போல், நாலு வருடங்களுக்கு ஒரு தடவை, முன்னைய ஜனாதிபதி தேர்தலில் இருந்து இரண்டு வருடங்களின் பின், midterm என்ற இடைக்கால தேர்தல் இடம்பெறும். இந்த இடைக்கால தேர்தலில் அனைத்து House of Representatives ஆசனங்களும், […]

சவுதி சகோதரிகள் மரணத்திலும் சந்தேகம்

அமெரிக்காவின் நியூ யார்கில் (New York) நகரில் உள்ள ஆறு ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட சவுதி குடியுரிமை கொண்ட இரண்டு சகோதரிகளின் உடல்கள் பலத்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளன. துருக்கியில் உள்ள சவுதி தூதுவரகத்தில் வைத்து சவுதி பத்திரிகையாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட இக்காலத்தில், இந்த சகோதரிகளின் மரணங்களும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளன. . அக்டோபர் மாதம் 24 ஆம் திகதி நியூ யார்க் பகுதில் உள்ள Hudson River என்ற ஆற்றில் இருந்து இரண்டு பெண்களின் உடல்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டன. […]

பயணி சாரதியை தாக்க, பஸ் ஆற்றுள் வீழ்ந்தது

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சீனாவின் சொங்சிங் (ChongQing) நகரில், Yangtze ஆற்றுக்கு மேலாக செல்லும் பாலம் சென்றுகொண்டிருந்த பயணிகள் பஸ் ஒன்று கீழே உள்ள ஆற்றுள் வீந்திருந்தது. பயணி பெண் ஒருவர் சாரதியை தாக்கிய போது, சாரதி கட்டுப்பாட்டை இழக்க, பஸ் 50 மீட்டர் கீழே உள்ள ஆற்றுள் வீழ்ந்துள்ளது. பஸ்சில் இருந்த 15 பெரும் பலியாகி உள்ளனர். . விபத்து இடம்பெற்ற நாட்களில் அதிகாரிகளுக்கு விபத்துக்கான காரணம் என்னவென்று தெரிந்திருக்கவில்லை. காரணம் அறியாத […]

ஆறு மாதங்களின் பின் ரம்ப்-சீ ஜின்பிங் தொடர்பு

ஆறு மாதங்களின் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி ரம்பும், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கும் இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடி உள்ளனர். . சீனா மீது தடைகளை விதித்து, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிக இறக்குமதி வரி விதித்து ஒரு வர்த்தக யுத்தத்தை ஆரம்பித்து இருந்தார் ரம்ப். சீனா வேறுவழி இன்றி தனது கூற்றுப்படி செயல்படும் என்று கருதியும் இருந்தார் அவர். . ஆனால் சீனா பதிலுக்கு தானும் புதிய இறக்குமதி வரிகளை அமெரிக்க […]

மலாவியில் காந்தி சிலைக்கு எதிர்ப்பு

ஆபிரிக்க நாடான மலாவியில் (Malawi) நிறுவப்படும் காந்தி சிலைக்கு கடும் எதிர்ப்பு தோன்றியுள்ளது. அந்நாட்டு குழு ஒன்று (Gandhi Must Fall) கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவ்விடத்து நீதிமன்றம் சிலைக்கான கட்டுமான வேலைகளை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. . சுமார் $10 மில்லியன் செலவில் மாநாட்டு மண்டபம் உட்பட ஒரு தொகுதி கட்டிடங்களை மலாவியின் Blantyre என்ற நகரில் கட்ட இந்தியா இணங்கி இருந்தது. இவ்விடத்தில் ஒரு காந்தி சிலையையும் நிர்மாணிக்க இந்திய நடவடிக்கைகள் எடுத்திருந்தது. . ஆனால் […]

பிறப்பு குடியுரிமையிலும் குறிவைக்கிறார் ரம்ப்

உலகில் உள்ள 174 நாடுகளில், குறைந்தது 36 நாடுகள் பிறப்பு மூலமான குடியுரிமையை (citizenship) வழங்குகின்றன. அதாவது இந்த நாடுகளில் பிறக்கும் குழந்தை ஒன்று, அக்குழந்தையின் பெற்றார் அந்நாட்டு குடியுரிமை அற்றவர்கள் ஆகினும், அந்த நாட்டு குடியுரிமையை பெறுகிறது. அந்த நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. ஆனால் அந்த முறையை மாற்றி அமைக்க முனைகிறார் ரம்ப். . அமெரிக்கா ஒரு செல்வந்த நாடாக இருப்பதால், மற்றைய நாட்டவர் இந்த சட்டத்தை தம் நலன்களுக்காக பயன்படுத்துவதும் உண்டு. சிலர் படிப்புக்கான […]

Angela Merkel அரசியலுக்கு முழுக்கு

ஜெர்மன் நாட்டின் அதிபர் அங்கெலா மேர்க்கெல் (Angela Merkel) தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இன்று திங்கள் கூறியுள்ளார். அவர் தனது தற்போதைய பதவிக்காலம் 2021 ஆம் ஆண்டில் முடிவடையும்வரை பதிவியில் இருக்கவுள்ளதாகவும், ஆனால் அதன் பின் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் கூறியுள்ளார். . அண்மைக்கால தேர்தல்களில் அவரின் தலைமையிலான கூட்டணி பலத்த தோல்விகளை சந்தித்து வருவதே இவரின் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அந்நாட்டின் மத்திய மாநிலம் ஒன்றில் சுமார் 5 […]

இந்தோனேசியாவில் Lion Air விமானம் வீழ்ந்தது

இந்தோனேசியாவில் Lion Air விமான சேவைக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்துள்ளது. விபத்துக்கு உள்ளன இந்த விமானத்தில் 181 பயணிகளும், 2 விமானிகளும், 5 பணியாளர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான இந்த விமானம் 2017 ஆம் ஆண்டு சேவைக்கு வந்திருந்த Boeing 737 MAX 8 வகை நவீன விமானமாகும். . தலைநகர் Jakarta விமான நிலையத்தில் இருந்து திங்கள் காலை 6:20 மணிக்கு Pangkal Pinang நோக்கி பயணித்த இந்த விமானம் (Flight JT-610) […]

அமெரிக்க யூத ஆலயத்தில் 11 பேர் பலி

அமெரிக்காவின் Pittsburgh நகரில் உள்ள யூதர்களின் ஆலயம் ஒன்றில் (synagogue) இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலுக்கு 11 பேர் பலியாகியும், மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர். காயமடைந்தோருள் 4 போலீசாரும், சந்தேக நபரும் அடங்குவர். . இந்த தாக்குதலை செய்தவர் என்று கருதப்படும் Robert Bowers, வயது 46, போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த தாக்குதலை AR-15 என்ற இராணுவ வகை துப்பாக்கி கொண்டே நிகழ்த்தி உள்ளார். அப்பொழுது இவரிடம் வேறு இரண்டு […]

14 குண்டுகளை அனுப்பிய அமெரிக்கர் கைது

அமெரிக்காவின் Democratic கட்சி தலைவர்களுக்கு 14 குழாய் குண்டுகளை தபால் மூலம் அனுப்பிய அமெரிக்கர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் வாகனமும் கைப்பற்றப்பட்டு உள்ளது. Florida மாநிலத்தில் உள்ள Plantation என்ற நகரிலேயே இந்த கைது இடம்பெற்று உள்ளது. . கைது செய்யப்பட்டுள்ள, 56 வயதுடைய, Cesar Sayoc என்பவர் ஒரு ரம்ப் ஆதரவாளர். ரம்பின் பிரச்சார கூட்டங்கள் பலவற்றுக்கு சென்ற இவர், அந்த இடங்களில் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை Internet எங்கும் பதித்துள்ளார். அவரின் […]