ஸ்ரீலங்கனை கைவிட்டது TPG

இலங்கையின் ஸ்ரீலங்கன் (SriLankan) விமானசேவை நிறுவனத்தில் முதலிடும் எண்ணத்தை கைவிட்டது அமெரிக்காவின் San Fransiscoவை தளமாக கொண்ட TPG என்ற நிறுவனம். . சுமார் US$ 2 பில்லியன் கடனில் மூழ்கியுள்ள இலங்கை விமான சேவை புதிய முதிலீடு ஒன்றை அவசரமாக தேடியது. TPG என்ற அமைப்பு (equity firm) 49% முதலீடு செய்யும் நோக்கில் இலங்கை விமானசேவையின் கணக்குகளை ஆய்வு செய்திருந்தது. ஆய்வுகளின் பின் இலங்கை விமானசேவையில் முதலீடு செய்வதை தவிர்த்து உள்ளது TPG. . […]

தென்கொரிய புதிய ஜனாதிபதி Moon Jae-in

தென்கொரியாவின் புதிய ஜனாதிபதியாக Moon Jae-in வெற்றி பெறவுள்ளார். இன்று செவ்வாய் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியை (Democratic Party) சார்ந்த Moon Jae-in சுமார் 41.5% வாக்குகளை பெற்று முதல் இடத்தில் உள்ளார்.Conservative கட்சியை சார்ந்த Hong Joon-Pyo சுமார் 23.3% வாக்குகளையும், சுயாதீன வேட்பாளரான Ahn Cheol-Soo சுமார் 21.8% வாக்குகளையும் பெறுவார்கள் என கணிக்கப்பட்டு உள்ளது. சட்டப்படியான முடிபுகள் புதன்கிழமையே வெளிவரும். . தென்கொரியாவில் செயல்பட்டு வந்திருந்த நீண்டகால Conservative ஆட்சி […]

டிரம்ப் பெயரில் விசா விற்கும் குஷ்னர் குடும்பம்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் முதல் மகளின் கணவன் ஜெரட் குஷ்னர் (Jared Kushner). டிரம்ப் போலவே குஷ்னர் குடும்பமும் கட்டுமான வர்த்தகத்தில் (development) ஈடுபட்டு உள்ளவர்கள். ஜெரட் குஷ்னர் அண்மையில் டிரம்ப் அரசில் விசேட ஆலோசகராக இணைந்தபின், தனது குடும்ப கட்டுமான நிறுவனத்தில் இருந்து சட்டப்படி விலகி இருந்தார். அதனால் அந்த வர்த்தகத்தை ஜெரட் குஷ்னரின் சகோதரி இயக்கி வருகிறார். . அண்மையில் சீனாவின் பெய்ஜிங் (Beijing) நகரில் குஷ்னர் குடும்பம் New Jerseyயில் கட்டும் புதிய […]

பிரான்சில் நடுநிலைவாதி Macron ஜனாதிபதியானார்

இன்று ஞாயிறு இடம்பெற்ற பிரென்சு ஜனாதிபதி தேர்தலில் முற்றாக வலதுசாரியோ அன்றி, இடதுசாரியோ அல்லாத நடுநிலை பேணும் Emmanuel Macron ஜனாதிபதியான தெரிவு செய்யப்பட்டு உள்ளார். இவருக்கு சுமார் 65% வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு எதிராக போட்டியிட்ட கடும்போக்கு வலதுசாரியான Marine Le Penக்கு சுமார் 35% வாக்குகள் மட்டுமே கிடைக்கும். . Macron ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த பிரான்ஸையே விரும்பியவர். இவர் புதிய குடிவராவாளர்களையும் அன்புடன் வரவேற்பவர். 1977 ஆம் ஆண்டு பிறந்த […]

சீனாவின் C919 விமானம் இன்று வெள்ளோட்டம்

முற்றாக சீனாவினால் தயாரிக்கப்பட்ட C919 என்ற பெரிய அளவு பயணிகள் விமானம் இன்று வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. சுமார் 175 பயணிகளை காவக்கூடிய இந்த அகலம் குறைந்த (narrow-body), இரட்டை இயந்திர (twin-engine) விமானம் ஐரோப்பாவின் narrow-body வகை Airbus A320 விமானத்துக்கும், அமெரிக்காவின் narrow-body வகை Boeing 737 விமானத்துக்கும் போட்டியாக அமையும். . சீனாவின் அரச நிறுவனமான COMAC (Commercial Aircraft Corporation of China) இந்த விமானத்தை தயாரித்து உள்ளது. அத்துடன் மேலும் சுமார் […]

Horana Tyre தொழில்சாலை கட்டுமானம் இடைநிறுத்தம்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) தலைமையகத்தை கொண்ட Ceylon Steel Corp. இலங்கையின் Wagawatta, Horana பகுதியில் புதியதோர் tire தயாரிக்கும் தொழிசாலை ஒன்றை நிறுவ முன்வந்தது. இந்த செய்தியை அந்நிறுவனத்தின் தலைமையான Nandana Jayadewa Lokuwithana கடந்த ஜனவரியில் வெளியிட்டு இருந்தார். Rigid Tyre என்ற இந்த தொழிசாலைக்கு வழங்கப்பட்ட நிலமே இந்த இழுபறிக்கு காரணம். . இந்த தொழிசாலையின் பயன்பாட்டுக்கு, அரசுக்கு சொந்தமான, 100 ஏக்கர் நிலத்தை இலங்கை அரசு வழங்கி இருந்தது. பதிலாக […]

ஆள ஆளில்லா ஜப்பானிய சிறுநகர்

ஆட்சியை கைப்பிடிக்க ஆளுக்காள் சண்டையிடும் இந்நாளில் ஆள ஆளில்லாமல் உள்ளது ஜப்பானிய சிறு நகரான Okawa. மொத்தம் 400 மக்களை கொண்டுள்ள இந்த சிறு நகரம் ஜப்பானின் Kochi பகுதியில் உள்ளது. . Okawa நகரசபைக்கு 6 உறுப்பினர் தெரிவு செய்யப்படுவர். 2015 ஆம் ஆண்டு நகரசபை தேர்தலில் 6 வேட்பாளர் மட்டுமே போட்டியிட்டு இருந்தனர். ஆனாலும் இதில் எவரும் குறைந்தது ஒரு வாக்காவது பெற்றிருக்கவில்லை. அப்படி இருந்தும் அந்த 6 பேரும் வேறு வழி இன்றி […]

சட்டத்தின் காதில் பூ வைக்கும் Red Bull வாரிசு

உலகின் பிரபல Red Bull குளிர்பான தாபகரின் பேரனை கைது செய்ய இன்று தாய்லாந்து நீதிமன்றம் கட்டளை விடுத்துள்ளது. விலை உயர்ந்த காரான Ferrari ஒன்றில் சென்ற Vorayuth Yoovidhya என்ற இந்த Red Bull வாரிசு 2012 ஆம் ஆண்டில் மோட்டார்சைக்கிளில் சென்ற போலீசார் ஒருவரை பின்னாலே மோதிவிட்டு தப்பி ஒட்டியுள்ளார். அப்போது அவரது வயது 27. மோதுண்ட போலீசார் மரணமாகி விட்டார். . தனது பண பலத்தாலும், உயர்மட்ட தொடர்பு பலத்தாலும் இன்றுவரை Vorayuth […]

சீனாவின் இரண்டாவது விமானம் தாங்கி

சீனாவின் இரண்டாவது விமானம் தாங்கி கப்பல் இன்று புதன் முதல் தடவையாக நீரில் விடப்பட்டு உள்ளது. இக்கப்பல் முற்றாக சீனாவாலேயே கடப்பட்டது. இது சீனாவின் முதல் விமானம் தாங்கியான Liaoning வகையை சார்ந்தது. . 2012 ஆம் ஆண்டு சேவைக்கு வந்திருந்த முதலாவது விமானம் தாங்கி சோவித் யூனியன் தயாரித்த ஒரு விமானம் தாங்கி. அதை கொள்வனவு செய்த சீனா, தனது கப்பல் கட்டும் துறையில் மறுசீர் செய்திருந்தது. . இன்று நீரில் விடப்பட விமானம் தாங்கியின் […]

ஜெர்மன் அமைச்சரை சந்திக்க இஸ்ரேல் பிரதமர் மறுப்பு

தற்போது இஸ்ரேலுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள ஜெர்மன் வெளிவிவகார அமைச்சர் Sigmar Gabrielஐ சந்திக்க இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu மறுத்துள்ளார். அமைச்சர் Gabriel இஸ்ரேலின் மனித உரிமைகள் அமைப்பான B’Tselemஐ சந்தித்ததே இதற்கு காரணம். . 1989 ஆம் ஆண்டு யூதர்களால் ஆரம்பிக்கப்பட்ட B’Tselem என்ற மனித உரிமைகள் அமைப்பு (NGO) பாலத்தீனர் மீது இஸ்ரேல் நடாத்தும் சட்டவிரோத தாக்குதல்களை ஆவணப்படுத்தி வருகின்றது. இதை கடும்போக்கு கொண்ட Netanyahu போன்றோர் விரும்பவில்லை. . Gabriel தனது பயணத்தின்போது […]