கனடாவில் மேலும் 751 பூர்வீக சிறுவர்களின் புதைகுழிகள்

கனடாவில் மேலும் 751 பூர்வீக சிறுவர்களின் புதைகுழிகள்

கனடாவின் சஸ்காச்சுவான் (Saskatchewan) மாநிலத்தில் மேலும் 751 பூர்வீக குடி சிறுவர்களின் அடையாளம் இன்றிய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. சில கிழமைகளுக்கு முன்னரே கனடாவின் British Columbia மாநிலத்தில் 215 பூர்வீக குடி சிறுவர்களின் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தன. Saskatchewan புதைகுழிகள் 1899ம் ஆண்டு முதல் 1997ம் ஆண்டு வரை இயங்கிய The Marieval Indian Residential School என்ற பாடசாலை இருந்த பகுதியிலேயே காணப்பட்டு உள்ளன. ஆதிக்குடி மக்களின் சிறுவர்களை பலவந்தமாக பெற்றாரிடம் இருந்து பிரித்து […]

Miami மாடி உடைந்து வீழ்ந்தது, 99 பேர் தொலைவு

Miami மாடி உடைந்து வீழ்ந்தது, 99 பேர் தொலைவு

அமெரிக்காவின் Florida மாநிலத்தில் உள்ள Miami நகரில் உள்ள மாடிவீடுகளை கொண்ட 12 மாடி கட்டிடத்தின் அரைப்பகுதி இன்று வியாழன் அதிகாலை 1:30 மணியளவில் உடைந்து வீழ்ந்துள்ளது. இதுவரை ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 99 பேர் எங்கே என்று அறியப்படவில்லை. அதேவேளை 102 பேர் தப்பி அல்லது காப்பாற்றப்பட்டு உள்ளனர். 1981ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மாடியில் உள்ள 135 வீடுகளில், 55 வீடுகள் உடைந்து வீழ்ந்து உள்ளன. இந்த மாடி 8777 Collins […]

Antivirus குரு McAfee ஸ்பெயின் சிறையில் மரணம்

Antivirus குரு McAfee ஸ்பெயின் சிறையில் மரணம்

McAfee என்ற antivirus software நிறுவனத்தை ஆரம்பித்த John McAfee, வயது 75, இன்று புதன்கிழமை ஸ்பெயின் சிறையில் பிணமாக காணப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சில மணித்தியாலங்களுக்கு முன்னரே ஸ்பெயின் நீதிமன்றம் அவரை அமெரிக்காவுக்கு நாடுகடத்தலாம் என்று தீர்ப்பு கூறியிருந்தது. 1987ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட McAfee என்ற antivirus software முதல் தரமான antivirus software ஆக விளங்கியது. அதை ஆரம்பித்த John McAfee antivirus software மூலம் பெரும் செல்வந்தத்தை பெற்று […]

அமெரிக்கா, சீனா இடையே தூதுவர் இல்லை

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே தற்போது தூதுவர்கள் இன்றிய நிலை உருவாகியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே நிலவிவரும் முறுகல் நிலையின் ஒரு அங்கமாகவே கருதப்படுகிறது. இருதரப்பிலும் தூதரகங்கள் இருந்தாலும் தற்போது தூதுவர்கள் இல்லை. கடந்த ஆண்டு, ரம்ப் ஆட்சிக்காலத்தில், Terry Branstad என்ற சீனாவுக்கான அமெரிக்க தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டு இருந்தார். அனால் சனாதிபதி ரம்போ அல்லது பின் வந்த சனாதிபதி பைடெனோ சீனாவுக்கான புதிய தூதுவரை இதுவரை நியமிக்கவில்லை. இந்நிலையில் அமெரிக்காவுக்கான சீனாவின் தூதுவர் Cui […]

பணிப்பெண் கொலை, சிங்கப்பூர் வீட்டுக்காரிக்கு 30 ஆண்டுகள்

பணிப்பெண் கொலை, சிங்கப்பூர் வீட்டுக்காரிக்கு 30 ஆண்டுகள்

தனது வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த மியன்மார் நாட்டு பெண்ணை காயத்திரி முருகையன் (Gaiyathiri Murugaran) என்ற வீட்டுக்காரிக்கு அடித்து, துன்புறுத்தி கொலை செய்த குற்றத்துக்காக இன்று செவ்வாய் 30 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார். 2016ம் ஆண்டு ஜூலை மாதம் பலியான Piang Ngaih Don என்ற 24 வயதுடைய பணிப்பெண் மேற்படி குடும்பத்தில் 1 ஆண்டு அளவிலேயே பணி செய்து வந்துள்ளார். இப்பெண் காலால் மிதித்து, கழுத்தை நெரித்து, தும்புத்தடியால் அடித்து, இரும்பால் சுட்டு துன்புறுத்தப்பட்டு […]

காளான் புற்றுநோயை 45% ஆல் குறைக்கும்

காளான் புற்றுநோயை 45% ஆல் குறைக்கும்

காளானை (mushroom) உண்பது புற்றுநோய் ஏற்படுவதை சுமார் 45% ஆல் குறைக்கும் என்கிறது அமெரிக்காவின் Pennsylvania State University ஆய்வு ஒன்று. தினமும் இரண்டு நடுத்தர அளவிலான காளானை உண்பது மேற்படி அளவிலான புற்றுநோய் தவிர்ப்புக்கு உதவுமாம். 1966ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையான காலத்து 17 ஆய்வுகளின் தரவுகளை ஆய்ந்த பின்னரே இந்த கருத்தை மேற்படி ஆய்வுக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த ஆய்வுக்கு 19,500 புற்றுநோய் நோயாளிகளின் தவுகள் உள்ளடக்கப்பட்டு இருந்தன. காளானில் vitamins, […]

Trump Tower வீடு ஒன்று அரை விலைக்கு

Trump Tower வீடு ஒன்று அரை விலைக்கு

போர்த்துக்கல் நாட்டின் கால்பந்தாட்ட வீரரான Cristiano Ronaldo 2015ம் ஆண்டு நியூ யார்க் நகரில் உள்ள Trump Tower என்ற அடுக்குமாடியில் வீடு (condo) ஒன்றை $18.5 மில்லியனுக்கு கொள்வனவு செய்திருந்தார். அது ரம்ப் சனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னான காலம். ஆனால் ரம்பின் 4 ஆண்டு ஆட்சியின் பின் அவரின் பெயரை கொண்ட சொத்துக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளன. Ronaldo கொள்வனவு செய்திருந்த வீடும் தற்போது அரை விலைக்கும் விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளது. […]

சீனாவில் 1 பில்லியன் கரோனா தடுப்பு ஊசிகள்

சீனாவில் 1 பில்லியன் கரோனா தடுப்பு ஊசிகள்

சீனா இன்று சனிக்கிழமை வரை 990.25 மில்லியன் கரோனா தடுப்பு ஊசிகளை மக்களுக்கு ஏற்றி உள்ளதாக சீனாவின் National Health Commission தரவுகள் கூறுகின்றன. சீனா தயாரித்த தடுப்பு ஊசிகள் மட்டுமே அங்கு வழங்கப்படுகின்றன. சீனாவில் ஏற்றப்பட்ட தடுப்பு ஊசிகளின் தொகை உலக அளவில் ஏற்றப்பட்ட தடுப்பு ஊசிகளின் மொத்த தொகையின் 1/3 மடங்கு ஆகிறது. ஆனால் சீனாவின் சனத்தொகை உலக சனத்தொகையின் 1/5 மடங்கு மட்டுமே. சில தினங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 20 மில்லியன் […]

Crocodile Tears of the Hypocritical G4.5

Crocodile Tears of the Hypocritical G4.5

(Elavalagan, June 18, 2021) The leaders of the G7 met in Cornwall from June 11th to 13th for their 2021 Summit. At the end of the Summit they released their joint communique. The purpose of the summit and the communique was to identify the pressing issues and present ways to tackle them. But this communique […]

ஒரு கிழமைக்குள் $13.2 பில்லியனை இழந்தார் அடானி

ஒரு கிழமைக்குள் $13.2 பில்லியனை இழந்தார் அடானி

இந்தியாவின் பெரும் செல்வந்தர்களின் ஒருவரான அடானி (Gautam Adani) கடந்த ஒரு கிழமைக்குள் சுமார் $13.2 பில்லியன் வெகுமதியை இழந்துள்ளார். தற்போது அவரின் மொத்த சொத்துக்கள் சுமார் $63.5 பில்லியன் என்று கூறப்படுகிறது. இவரின் வெளிநாட்டு முதலீடுகளில் குழப்பங்கள் இருக்கலாம் என்று ஏனைய முதலீட்டாளர் கருதி அவருடனான பங்குகளை கைவிட்டதே சரிவுக்கு காரணம். இந்த மாத ஆரம்பத்தில் அடானியின் மொத்த சொத்துக்கள் சுமார் $80 பில்லியன் ஆக இருந்தது. Mauritius நாட்டில் பதிவு செய்யப்பட்ட இவரின் Albula […]