TikTok விற்பனையை முடக்கும் புதிய சீன சட்டம்

TikTok விற்பனையை முடக்கும் புதிய சீன சட்டம்

கடந்த வெள்ளிக்கிழமை சீனா நடைமுறை செய்த புதிய தொழில்நுட்ப ஏற்றுமதி சட்டம் மூலம் சீனாவின் TikTok app தனது அமெரிக்க பிரிவை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்படுவதை சீன அரசின் கட்டுப்பாட்டுள் எடுத்துள்ளது.சீனாவின் புதிய ஏற்றுமதி சட்டப்படி TikTok கின் அமெரிக்க பிரிவு அமெரிக்காவுக்கு விற்பனை செய்யப்படுவது சீன அரச அனுமதியை பெறவேண்டும். TikTok அமெரிக்காவின் பிரிவு அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்படவில்லை என்றால் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி அமெரிக்காவில் அதன் செயல்பாடு தடை செய்யப்படும் என்று ரம்ப் கூறியிருந்தார். TikTok […]

தாய்வானில் பெண் குழந்தையை தூக்கிய பட்டம் 

தாய்வானில் பெண் குழந்தை ஒன்றை தூக்கி உலுக்கியது பெரியதோர் பட்டம்.

தாய்வானில் பெண் குழந்தை ஒன்றை தூக்கி உலுக்கியது பெரியதோர் பட்டம்.

அமெரிக்க விமானத்தை சீண்டிய ரஷ்ய விமானங்கள்

அமெரிக்க விமானத்தை சீண்டிய ரஷ்ய விமானங்கள்

நேற்று வெள்ளிக்கிழமை கருங்கடலின் (Black Sea) சர்வதேச வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த அமெரிக்காவின் B-52 வகை குண்டுவீச்சு விமானத்தை ரஷ்யாவின் இரண்டு Su-27 வகை யுத்த விமானங்கள் ஆபத்தான முறையில் பல தடவைகள் சீண்டியதாக அமெரிக்கா கூறியுள்ளது. மிகப்பெரிய B-52 விமானத்திலிருந்து 100 அடிக்கும் குறைவான தூரத்தில் ரஷ்ய விமானங்கள் பறந்து உள்ளன. அமெரிக்கா அந்த வீடியோவையும் வெளியிட்டு உள்ளது. அதனால் B-52 உலுக்கப்பட்டு உள்ளது. Su-27 போன்ற சிறிய யுத்த விமானங்கள் இலகுவில் திசைதிரும்பி தப்பிக்கூடியன. ஆனால் […]

செல்வந்த சீனர் தற்போது சைப்ரசுக்கு படையெடுப்பு

செல்வந்த சீனர் தற்போது சைப்ரசுக்கு படையெடுப்பு

சீனாவின் செல்வந்தர் தமது பண பலத்தை பயன்படுத்தி முற்காலங்களில் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் குடியுரிமை பெற்று வந்துள்ளனர். ஆனால் சமீப காலங்களில் சைப்ரஸ் (Cyprus) அவர்களின் இரண்டாம் குடியிருமை நாடாக இடம்பெற ஆரம்பித்து உள்ளது என்கிறது Al Jazeera செய்தி சேவை. 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலத்தில், அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஆட்சி காலத்தில், 500 க்கும் அதிகமான செல்வந்த சீனர்கள் சைப்பிரஸ் குடியிருமை பெறுள்ளனர் என்கிறது […]

சீன கரோனா மருந்து கனடாவுக்கு கிடைக்கவில்லை

சீன கரோனா மருந்து கனடாவுக்கு கிடைக்கவில்லை

சீனாவின் CanSinoBio என்ற மருத்துவ ஆய்வு நிலையத்துக்கும், கனடாவின் NRC (National Research Council) க்கும் இடையில் மருத்துவ ஆய்வில் நீண்டகால உறவு உண்டு. இரண்டு தரப்பும் பல புதிய மருந்துகளை தயாரிக்கும் பணிகளில் இணைந்தது செயல்பட்டு உள்ளன. ஆனால் கரோனாவுக்கான புதிய மருந்தை CanSinoBio கனடாவின் NRC க்கு வழங்காது பின்னடித்து உள்ளது. அதனால் விசனம் கொண்டுள்ளது கனடா. அண்மையில் சீனாவின் Huawei நிறுவன அதிகாரியான Meng Wanzhou என்பரை அமெரிக்காவின் விருப்பத்துக்கு ஏற்ப கனடா […]

அமெரிக்காவை தாக்கவுள்ள சூறாவளி Laura

அமெரிக்காவை தாக்கவுள்ள சூறாவளி Laura

அமெரிக்காவின் Texas மற்றும் Louisiana மாநிலங்களின் எல்லையோர, மெஸ்க்சிகோ வளைகுடா கரையோரம் Category 4 பலம் கொண்ட சூறாவளியாக தாக்கவுள்ளது சூறாவளி லாரா (Laura). உள்ளூர் நேரப்படி இந்த சூறாவளி வியாழன் அதிகாலை கரையை தாக்கும் என்று கூறப்படுகிறது தற்போது மெக்ஸிகோ வளைகுடாவில் நிலைகொண்டுள்ள Laura சுமார் 240 km/h காற்று வீச்சை கொண்டுள்ளது. இது கரையை தாக்கும்போது சுமார் 225 km/h காற்றுவீச்சை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. அத்துடன் சில கரையோர பகுதிகளில் வெள்ளம் 15 […]

சீன, அமெரிக்க இராணுவ முறுகல் மேலும் உக்கிரம்

சீன, அமெரிக்க இராணுவ முறுகல் மேலும் உக்கிரம்

சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான இராணுவ முறுகல் நிலை இன்று புதன்கிழமை மேலும் உக்கிரம் அடைந்து உள்ளது. அமெரிக்காவின் U-2 வகை வேவு விமானம் ஒன்று சீனாவின் no-fly zone மேலாக பறந்த பின் சீனா இன்று இரண்டு பாரிய ஏவுகணைகளை ஏவி உள்ளது. அதில் ஒன்று விமானம் தாங்கி கப்பல்களை அழிக்கவல்லது (aircraft carrier killer). கடந்த சில தினங்களாக சீனா தென் சீன கடல், Bohai, Yellow sea உட்பட 4 கடல்களில் பாரிய யுத்த […]

ஈரான் மீதான தடையை நீடிக்க ஐ.நா. மறுப்பு

ஈரான் மீதான தடையை நீடிக்க ஐ.நா. மறுப்பு

ஈரான் மீதான ஐ. நாவின் ஆயுத தடையை தொடரவைக்கும் அமெரிக்காவின் ஐ.நா. மூலமான இரண்டாம் முயற்சியும் இன்று தோல்வி அடைந்தது. முன்னர் முயன்ற Resolution 2231 முறை பலிக்காத நிலையில் கடந்த வியாழன் அமெரிக்கா மீண்டும் Joint Comprehensive Paln of Action (JCPOA) மூலமான ‘snap back’ விதியை பயன்படுத்தி ஈரான் மீதான ஆயுத தடையை நீடிக்க முயன்று இருந்தது. அந்த முயற்சிக்கே ஐ. நா. இன்று செய்வாய் மறுப்பு தெரிவித்து உள்ளது. 2015 ஆம் […]

மும்பாயில் மாடிகள் உடைவு, 100 பேர் இடிபாடுள்

மும்பாயில் மாடிகள் உடைவு, 100 பேர் இடிபாடுள்

மும்பாயில் இருந்து சுமார் 200 km தெற்கே உள்ள Mahad என்ற நகரில் குறைந்தது 47 மாடி வீடுகள் உடைந்து வீழ்ந்துள்ளன. இந்த இடிபாடுகள் உள்ளே சுமார் 100 அகப்பட்டும் உள்ளனர். குறைந்தது 28 பேர் ஏற்கனவே மீட்கப்பட்டு உள்ளனர். இதுவரை ஒருவர் பலியானது அறியப்படும் உள்ளது. ஐந்து மாடி அடுக்குகளை கொண்ட இந்த வீட்டு தொகுதியிலேயே மேற்படி 47 வீடுகளும் இருந்துள்ளன. உள்ளூர் நேரப்படி இன்று திங்கள் மாலை 6:50 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்துள்ளது. […]

அமெரிக்க அறிக்கை: சீன இராணுவ பலம் நிகராகிறது

அமெரிக்க காங்கிரசின் (US Congress) பணிப்பிற்கு அமைய இராணுவ ஆய்வாளர் குழு ஒன்று தயாரித்த ஆய்வு அறிக்கையின்படி சீனாவின் இராணுவம் அமெரிக்காவின் இராணுவத்தின் பலத்துக்கு ஏறக்குறைய நிகரான நிலையை அடைந்துள்ளது. இந்த மாதம் சமர்பிக்கப்பட்ட மேற்படி அறிக்கை Emerging Military Technologies: Background and Issues for Congress என்று தலைப்பிடப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையின்படி தற்போது சீனாவே அமெரிக்க படைகளுக்கு மிகப்பெரிய ஆபத்து, ரஷ்யா அல்ல. தென்சீன கடல், தாய்வான் போன்ற சீனாவை அண்டிய பகுதில் […]