Chile நாட்டில் சுனாமி எச்சரிக்கை

Chile

தென் அமெரிக்காவில் உள்ள சிலே (Chile) நாட்டின் Illapel என்ற நகரில் இருந்து 55 km மேற்கேயான கடலில் இன்று இரவு உள்ளூர் நேரப்படி 7:54 மணிக்கு (22:54 GMT) 8.5 அளவிலான நிலநடுக்கம் இடம்பெற்று உள்ளது. இதனால் சுனாமி அலைகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி அலைகள் உள்ளூர் நேரப்படி இன்று 11:00 என்றும் கூறப்பட்டுள்ளது.
.
அதேவேளை அமெரிக்காவும் கலிபோர்னியா மற்றும் ஹவாய் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
.
சிலே நாட்டின் கடல்படை கடலின் சில பகுதிகளில் 4.5 மீட்டர் (15 அடி) உயர அலைகள் காணப்பட்டதாக கூறியுள்ளது.
.
சிலே நிலநடுக்கம் அதிகம் காணப்படும் நாடு ஒன்றாகும். 2010 8.8  அளவிலான நிலநடுக்கத்துக்கு 500 பேர் பலியாகி இருந்தனர். 1960 ஆம் ஆண்டில் 9.5 அளவிலான நிலநடுக்கத்துக்கு ஆயிரக்கணக்கானோர் பலியாகி இருந்தனர்..
.