CIAயின் கொடூர விசாரணை பயனற்றது

CIA

அமெரிக்காவில் இன்று வெளியிடப்பட்ட Senate Report, அவர்களால் கைது செய்யப்பட்ட al-Queda உறுப்பினர் மீது சட்டங்களுக்கு அப்பால் CIA செய்த கொடூர விசாரணைகள் புதிதாக உண்மைகள் எதையும் கொடுக்கவில்லை என்கிறது. al-Quedaவின் தலைவர் ஒசாமாவின் மறைவிடத்தை கண்டுபிடித்ததிலும் CIAயின் விசாரணைகளால் பெறப்பட்ட உண்மைகள் பயன்படவில்லை என்கிறது இந்த அறிக்கை.
.
சுமார் 120 சந்தேகநபர்கள் மீது நடாத்தப்பட்ட water-boarding (கைதியின் முகத்தை மேலே பார்க்க வைத்து முகத்தில் நீண்ட நேரம் பெருமளவு நீரை ஊற்றுதல்), ஒரு வாரகாலம் வரை நித்திரை இன்றி இருக்க வைப்பது, போன்ற சித்திரவதைகள் கைதிகளிடம் இருந்து மேலதிக உண்மைகள் எதையும் பெறவில்லை என்கிறது இந்த அறிக்கை. ஒரு கைதி சுமார் 180 தடவைகள் water-boarding இக்கு உள்ளாகி இருந்துள்ளார்.
.
அதேவேளை CIA தனது சட்டவிரோத சித்திரவதை விசாரணைகள் பற்றிய உண்மைகளை அமெரிக்க Senateஇக்கும் பொதுமக்களுக்கும் மறைத்து இருந்துள்ளதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.
.

6200 பக்கங்களை கொண்ட அறிக்கையின் 500 பக்கங்கள் மட்டுமே இன்று பொதுமக்களின் பார்வைக்கு விடப்பட்டிருந்தது.