CIA வழங்கிய இலஞ்சம்களை பெற்ற ஆப்கான் ஜனாதிபதி

ஆப்கான் ஜனாதிபதி ஹமிட் கார்சாய் (Hamid Karzai) தான் அமெரிக்க உளவு நிறுவனமான CIA வழங்கிய இலஞ்சம்களை பெற்றுக்கொண்டதாக கூறியுள்ளார். இதுபற்றி New York Times என்ற பத்திரிக்கை அண்மையில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதை ஏற்றுக்கொண்டபோதே கார்சாய் இவ்வாறு கூறியுள்ளார்.

NY Times செய்தியின்படி இவர் பல பத்து மில்லியன் அமெரிக்கன் டொலர்களை பொதிகளில் பெற்றுள்ளார். அவர் தனது பதிலில் “ஆம், தேசிய பாதுகாப்பு அலுவலகம் கடந்த 10 வருடங்களாக அமெரிக்காவுடன் இருந்து உதவிகளை பெற்று வருகிறது” என்றுள்ளார்.

இந்த பண உதவிக்கு பிரதியுபகாரமாக கார்சாய் CIA இனது Kandahar Strike Force போன்ற ஆயுத குழுக்கள் ஆப்கானில் இயங்க அனுமதித்திருந்தார். இவரின் காலம் சென்ற சகோதரர் அஹ்மெட் வலி கார்சாய்யும் CIA இடம் அதிகம் பணம் பெற்றுள்ளார்.

அதேவேளை ஹமிட் கார்சாய் ஈரானிடம் இருந்தும் பணம் பெற்றுள்ளார்.

அண்மைகாலங்களில் இவருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுள் சிறு மோதல்கள் அவப்போது ஏற்படுகின்றன.