Coca Cola சட்டவிரோதமாக GPS ஐ பாவிக்கிறது என்கிறது சீனா

சீனாவில் உள்ள Yunnan மாநில Coca Colaவின் பிரிவுக்குள் அடங்கிய விநியோக வாகனங்கள் சட்டவிரோதமாக GPSகளை (Global Positioning System) பாவிக்கின்றன என்று குற்றம் சாட்டுகிறது Yunnan மாநில அரசு. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் சீனாவின் முக்கிய, பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட நிலையங்களை வரைபடங்களில் இலகுவில் அடையாளப்படுத்த முடியும். அதனால் சீனாவில் மேற்கு நாட்டு சேவையான GPS பாவனைக்கு மெரும் தடை உண்டு. GPS மேற்கு நாட்டு செய்மதிகளை பாவித்து செயல்படுவன.

GPS ஆனது அமெரிக்கா இராணுவத்தால் உருவாக்கப்பட்டது. அத்துடன் இது மேற்கு நாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் சீனா போன்ற நாடுகள் இவற்றின்மீது நம்பிக்கை வைக்கவில்லை. GPS இக்கு பதிலாக சீனா தமது உள்ளூர் BeiDou (BDS, BeiDou Navigation Satellite System) சேவையையே பயன்படுத்துகின்றது. இந்த சேவை சீனாவின் செய்மதிகளை பாவித்து செயல்படுவன. இந்த சேவையையே சீனாவில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்களையும் பாவிக்கும்படி சொல்கிறது சீனா.

2010 ஆம் ஆண்டு Xue Feng என்ற அமெரிக்க சீனர் இவ்வாறான தரவுகளை சீன எண்ணைவள பிரிவுகளில் இருந்து பெற்று அமெரிக்காவுக்கு எடுத்து செல்லவிருந்தார் என குற்றம் சாட்டி 8 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.