December 16 – 22 வரை பூமியில் இருள் இல்லை

Nasa

Internet இல் அதிகமானவை பொய்கள், புரளிகள். இவ்வாறு பொய், புரளி செய்திகளை உருவாக்கி Internet இல் பரவவிட பல காரணங்கள் உண்டு. இவ்வகை பொய், புரளி உருவாக்கல் வேலைகளை PhotoShop போன்ற softwareகளும் இலகுபடுத்தும்.
.

தற்போது Internetஇல் பரவிவரும் பெரும் பொய் December 16 முதல் 22 வரை பூமி இருளாக இருக்கும் என்பதாகும். இந்த செய்தியை வலுப்படுத்த NASAவின் பெயரும் பாவிக்கப்பட்டுள்ளது. The Washington Post செய்தி ஒன்றின்படி இந்த பொய் செய்தி Huzlers இனால் உருவாக்கப்பட்டதாம். பின்வரும் Link இல் அதை வாசிக்கலாம்.
.
http://www.washingtonpost.com/news/the-intersect/wp/2014/10/31/what-was-fake-on-the-internet-this-week-paul-rudd-heroics-the-halloween-quarantine-and-six-days-of-darkness/
.
இவ்வாறு பல பொய், புரளிகள் Internetஇல் உண்டு. இன்னுமொரு குழு cell phone களை அருகருகே வைத்து ஒன்றில் இருந்து மற்றையதுக்கு call எடுத்தால் அவ்விரண்டுக்கும் இடையில் செல்லும் மின்னலை அவற்றிடையே உள்ள சோளத்தை பொரிக்கும் என்று ஒரு YouTube வீடியோவை வெளியிட்டது. அந்த ‘வியத்தகு’ வீடியோவுக்கு கிடைத்தது 2.8 மில்லியன் பார்வைகள். இந்த cell மின்னியல் விடயம் உண்மையா? அதனால் அவர்களுக்கு என்ன இலாபம்?
.

.
இந்த cell விடயமும் ஒரு பொய்யே. அழைக்கும் மற்றும் அழைக்கப்படும் cell phone கள்  அருகருகே இருந்தாலும் அவை cell towerகளுடனேயே தொடர்பை கொண்டிருக்கும், நேரடியாக அல்ல. இங்கே சோளம் வெடிப்பது MGR, சிவாஜி போன்றோர் இரட்டை வேடம் போடுவதுபோல் வெவ்வேறு வீடியோக்களை ஒன்றுள் ஒன்றை புகுத்தி எடுப்பது.
.
இவ்வாறு செய்வோருக்கு பலத்த பொருளாதார இலாபம் உண்டு. உதாரணமாக இந்த cell phone வீடியோவை 2.8 மில்லியன் பார்வைகள் இட்டவர்கள் அந்த பக்கங்களில் வரும் விளம்பரங்களையும் பார்த்திருப்பார்கள். அதனால் விளம்பரங்களின் வருமானம் per-click அல்லது per-view களினால் அறவிடப்படும். ஆகவே அதிக view அல்லது click அதிக வருமானத்தை கொடுக்கும். அதிக viewவை ஏற்படுத்த ‘வியத்தகு’ பொய் புரளிகள் உருவாக்குவர்.