Deraa நகரில் சிரியா அரச படைகள்

Syria

2011 ஆம் ஆண்டில் சிரியாவின் தென் பகுதியான Deraa என்ற இடத்திலேயே அந்நாட்டு அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்தன. மேற்கு நாடுகளினதும், சில அரபு நாடுகளினதும் உதவியுடன் இந்த கிளர்ச்சி அசாத் அரசுக்கு எதிரான ஆயுத யுத்தமாக மாற்றப்பட்டது. நேற்று வியாழன் Deraa பகுதியை அசாத்தின் அரச படைகள் மீண்டும் கைப்பற்றின.
.
ஆரம்பித்தில் மேற்கு நாடுகளாலும், மேற்கு நட்பு அரபு நாடுகளாலும் உருவாக்கப்பட்ட Free Syrian Army என்ற ஆயுத குழு நாளடைவில் சிதைய ஆரம்பித்தன. அதனிடையே ISIS குழுவும் பலமாக வளர ஆரம்பித்தது. இவ்வாறு பல தரப்பு ஆயுத குழுக்களும், அவர்களுக்கு உதவிய பலதரப்பு வெளிநாடுகளும் பல்வேறு நோக்குகளுடன் சண்டையில் ஈடுபட்டன. முழு சிரியாவும் எரிந்தது.
.
அசாத்துக்கு உதவியாக ஈரானும், லெபனானின் பலமான ஹிஸ்புல்லா அமைப்பும் போராடின. ஆனால் ரஷ்யா ஆசாத்தின் உதவிக்கு சிரியாவுள் நுழைந்த போது அசாத் பலம் வேகமாக வலு பெற்றது. பெரும்பாலான கிளர்ச்சி ஆயுத அமைப்புகள் சிரியாவின் அரச படைகளால் அழிக்கப்பட்டன அல்லது பின்வாங்கின.
.
இறுதிவரை எதிர்த்து நின்ற, ஜோர்டான் எல்லையோர பகுதியான Deraaவும் தற்போது அசாத் அரசின் கட்டுபாட்டுக்குள் வந்துள்ளது.
.

அந்நியரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த யுத்தத்துக்கு பலியானோர் தொகை திடமாக எவருக்கும் தெரியாது. 2014 ஆம் ஆண்டில் ஐ.நா. கணிப்பு ஒன்று மரணித்தோர் தொகை 191,369 என்று கூறியது. அதன் பின் ஐ.நா. தரவுகள் சேகரிப்பதை நிறுத்தியது. 2016 ஆம் ஆண்டில் Syrian Centre for Policy Research மரணித்தோர் தொகை 470,000 என்றும் காயமடைந்தோர் தொகை 1.9 மில்லியன் என்றும் கூறியது.
.