Field Hockey பித்தளை பதக்கம் இந்தியாவுக்கு, 41 ஆண்டுகளின் பின்

Field Hockey பித்தளை பதக்கம் இந்தியாவுக்கு, 41 ஆண்டுகளின் பின்

இன்று வியாழன் இடம்பெற்ற ஆண்களுக்கான field hockey ஒலிம்பிக் விளையாட்டில் இந்தியா மூன்றாம் இடத்தை அடைந்து பித்தளை பதக்கத்தை வென்றுள்ளது. ஜெர்மனியை தோற்கடித்தே இந்தியா இந்த பதக்கத்தை வென்றுள்ளது. முதலாம் இடத்தில் பெல்ஜியமும், இரண்டாம் இடத்தில் அஸ்ரேலியாவும் உள்ளன.

தற்போது இந்தியா 2 வெள்ளி மற்றும் 3 பித்தளை பதக்கங்களாக மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது. 1900ம் ஆண்டு முதல் இந்தியா 33 பதக்கங்களையே வென்றுள்ளது. அதில் 12 பதக்கங்கள் field hockey விளையாட்டுக்கே கிடைத்தன. முற்காலங்களில் இந்த விளையாட்டை விளையாடியவர் பலர் வெள்ளையர்.

இந்தியா அளவிலான சனத்தொகையை கொண்ட சீனா தற்போது 34 தங்க, 24 வெள்ளி, 16 பித்தளை பதக்கங்களாக மொத்தம் 74 பதக்கங்களை வென்றுள்ளது.

2016ம் ஆண்டு இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 1 வெள்ளி, 1 பித்தளையாக மொத்தம் 2 பதக்கங்களை வென்று இருந்தது. அதற்கு முன், 2012ம் ஆண்டில் 2 வெள்ளி, 4 பித்தளையாக மொத்தம் 6 பதக்கங்களை இந்தியா வென்று இருந்தது.