FIFA உட்பட உதைபந்து போட்டிகளில் ஊழல்

Europol என்ற ஐரோப்பிய சங்க காவல்துறை பிரிவு செய்த விசாரணைகளின்படி, கடந்த 18 மாதங்களில் ஐரோப்பாவில் நடைபெற்ற 380 உதைபந்தாட்ட போட்டிகளிலும் ஐரோப்பாவுக்கு வெளியே 300 வரையான உதைபந்தாட்ட போட்டிகளில் திட்டமிட்டு தோல்விகளை தழுவுதல் (match-fixing) நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்போட்டிகளின் போது ஊழல் குழுக்கள் பந்தயங்களை நடைமுறைப்படுத்தி, பின் திட்டமிட்டு தரமான குழுக்களுக்கு தோல்வியை கொடுத்து இலாபம் அடைந்துள்ளன. இவ்வாறு செய்வதன் மூலம் US $11 மில்லியன் வரை இலாபம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மையான தொகை இதைவிடவும் அதிகமாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக்கு 13,000 email கள், ஆவணங்கள், தொலைபேசிகள், கணணி தரவுகள் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன.

இவர்களின் கூற்றுப்படி சிங்கபூரை தளமாக கொண்ட ஊழல் குழு ஒன்று $136,500 வரை இலஞ்சம் கொடுத்துள்ளது.