FlyDubai விமானம் விபத்தில், 60 பேர் வரை பலி

FlyDubai

இன்று டுபாய் விமான நிலையத்தில் இருந்து ரஷ்யாவின் தென்பகுதியில் உள்ள Rostov-on-Don விமான நிலையம் சென்ற FlyDubai Flight 981 Rostovவில் தரை இறங்கும்போது விபத்துக்கு உள்ளாகியது. இந்த விபத்துக்கு பாதகமான காலநிலையே காரணம் என்று கூறப்படுகிறது.
.
விபத்துக்கு உள்ளானது FlyDubai விமான சேவையின் Boeing 737-800 வகை விமானமாகும். இதில் சுமார் 59 பேர்வரை இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் நிலத்தில் இருந்தோர் சிலரும் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விமானம் 5 வருடங்கள் மட்டுமே சேவையில் இருந்துள்ளது.
.
பாதகமான காலநிலை காரணமாக ஒருதடவை தரை இறங்குவதை தவிர்த்து மேல் எழும்பி, சிலதடவைகள் மேலே வட்டமிட்டு, பின் மீண்டும் தரை இறங்கும்போதே இவ்விமானம் விபத்துக்கு உள்ளாகியது என்று கூறப்படுகிறது. இந்த விமானம் ஓடுபாதைக்கு இடது பக்கமாக சுமார் 150 முதல் 300 அடிவரை தொலைவில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
.