Gambiaவுள் நுழைந்தது Senegal இராணுவம்

TheGambia

வியாழன் அன்று தாம் Gambia நாட்டுள் நுழைந்துள்ளதாக Senegal இராணுவம் அறிவித்துள்ளது. Senegal இராணுவ கேணல் Abdou Ndiaye இந்த செய்தியை கூறியுள்ளார். தாம் அண்மையில் Gambia நாட்டுள் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி Adama Barrow வுக்கு ஆதரவு தெரிவித்தே இவாறு தமது இராணுவத்தை Gambiaவுள் நகர்த்தியதாக Senegal கூறியுள்ளது.
.
கடந்த டிசம்பர் மாதம் Gambiaவில் இடம்பெற்ற தேர்தலில் Adama Barrow ஜனாதிபதியாக வெற்றி பெற்றிருந்தார். அவரின் வெற்றியை தற்போதைய ஜனாதிபதி Yahya Jammeh ஏற்று இருந்திருந்தாலும், பின்னர் பதவியை விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டார். Jammeh இராணுவ சதி மூலம் 1994 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்திருந்தவர்.
.

Jammeh பதவி இறங்க மறுத்த நிலையில், புதிய ஜனாதிபதி Senegal நாட்டு தலைநகர் Dakarரில் உள்ள Gambia தூதுவர் நிலையத்தில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார். இவருக்கு ஆதரவாக Senegal பிரதமரும், Gambia நாட்டின் தேர்தல் திணைக்கள பொறுப்பாளரும் கலந்துகொண்டிருந்தனர். அத்துடன் ஐ.நா. பாதுகாப்பு அமைப்பும் புதிய ஜனாதிபதி Barrowவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
.