H-1B விசாவை ரம்ப் இடைநிறுத்தம், இந்தியர் பாதிப்பு

Visa

அமெரிக்கா வெளிநாட்டவருக்கு வழங்கும் வரும் H-1B என்ற வேலைவாய்ப்பு விசா வழங்கலை வரும் டிசம்பர் மாதம் வரை இடைநிறுத்தி உள்ளார் சனாதிபதி ரம்ப். கூடவே  H-1B விசா கொண்டோரின் துணைவருக்கு வழங்கப்படும் H-2B மற்றும் L விசா வழங்கல்களும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியாவே.
.
தற்காலங்களில் H-1B விசா வெளிநாடுகளின் தொழிநுட்ப ஊழியர்கள் அமெரிக்கா சென்று தொழில் செய்ய வழி செய்கிறது. வருடம் ஒன்றில் சுமார் 85,000 பேருக்கு H-1Bவழங்கப்படுகிறது. அதில் சுமார் 75% இந்தியர்களுக்கே செல்கிறன.
.
2004 ஆம் ஆண்டில் இருந்து 2012 ஆம் ஆண்டு வரையான காலத்தில் சுமார் 500,000 இந்தியர் H-1B விசாவை பெற்று அமெரிக்கா சென்று வேலை செய்துள்ளனர். அவர்களுடன் கூடவே அவர்களின் குடும்பங்களும் சென்றுள்ளன. H-1B  விசா பெறும் இந்தியர்களில் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகள் பேசுவோர் தொகைகள் அதிகமாக உள்ளன.
.
தற்போது H-1B விசா மூலம் அமெரிக்காவில் தங்கியிருந்து தொழில் செய்வோரின் விசாவுக்கு ஆபத்து இல்லை. புதிதாக H-1B விசாக்களை வழங்குவதே இடைநிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது.
.
H-1B விசா குடிவரவுக்கான விசா அல்ல (non-immigrant) என்றாலும் பொதுவாக இந்தியர் விரைவில் அமெரிக்க குடியிருப்பாளர் ஆவது வளமை.
.
வரும் அக்டோபர் 1 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள அடுத்த வர்த்தக ஆண்டுக்கான 275,000 H-1B விண்ணப்பங்களை அமெரிக்கா ஏற்கனவே பெற்றுள்ளது என்றும் அதில் 67% விண்ணப்பங்கள் இந்தியாவில் இருந்து கிடைத்தவை என்றும் கூறப்படுகிறது. இந்தியாவின் Wipro, InfoSys, Tata Consultancy Services ஆகியன H-1B விசா பெறுவதில் முன்னணியில் உள்ளன.
.