Hawaii இல் குடிமனை புகும் Lava

HawaiiLava

ஹவாய்யின் (Hawaii) மிக பெரிய தீவில் உள்ள Pahoa என்ற, சுமார் 1000 சனத்தொகையுடைய சிறு குடியிருப்பு ஒன்றை ஆக்கிரமிக்கிறது லாவா (lava). இந்த குடியிருப்பில் இருந்து சுமார் 200 Km தொலைவில் உள்ளது Kilauea என்ற volcano. இதில் இருந்து இந்த வருடம் June 27 ஆம் திகதி வெளியேறிய இந்த lava தற்போது இக்குடியிருப்பை அடைந்துள்ளது.
.
Kilauea volcano கடல் மட்டத்தில் இருந்து 810 மீட்டர் (2657 அடி) உயரத்தில் உள்ளது. Pahoa குடியிருப்பு சுமார் 200 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த lava வின் மணித்தியாலம் ஒன்றுக்கான நகர்வு சுமார் 5 முதல் 10 மீட்டர். இதன் சராசரி அகலம் 15 மீட்டர்கள்.
.
HawaiiLava2
.
1983 ஆம் ஆண்டு முதல் இந்த volcano வில் இருந்து lava வெளியேறி வந்தாலும், பெரும்பாலும் அது தெற்கே சென்று கடலுள் கலக்கும். ஆனால் இம்முறை கிழக்கே சென்றுள்ளது.
.
Volcano வில் இருந்து வெளியேறும் போது lava வின் வெப்பநிலை சுமார் 800 C முதல் 1200 C வரை இருக்கும். அது இறுகி கல்லாக மாறும்வரை ஆறுபோல் பள்ளத்தை நோக்கி ஓடும்.
.
1999 ஆம் ஆண்டில் இத்தாலியில் உள்ள Etna மலையின் lava வெளியே தள்ளப்படும் போது வானுள் சுமார் 2 km உயரம் சென்றதாக சொல்லப்படுகிறது. 1779 ஆம் ஆண்டில் Vesuvius மலையின் lava 3 km உயரம் வரை சென்று இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
.

படம்: U. S. Geological Survey