Howdy Modi மேடையில் மோதியும், ரம்பும்

Modi_Trump

அமெரிக்காவின் ஹியூஸ்ரன் (Houston) நகரில் உள்ள NRG அரங்கில் இன்று ஞாயிரு மதியம் இடம்பெறும் “Howdy Modi” நிகழ்வில் பிரதமர் மோதியும், சனாதிபதி ரம்பும் தோன்றி உள்ளார்கள்.
.
ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி மோதி காஸ்மீரின் விசேட உரிமைகளை பறித்து அங்கு கடும் கட்டுப்பாட்டு ஆட்சியை நடைமுறை செய்ததை காரணமாக கூறி பல ஆர்ப்பாட்டங்களும் Houston நகரில் இடம்பெறுள்ளன.
.
2020 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள அமெரிக்க சனாதிபதி தேர்தலில் தனக்கு வாக்கு சேர்க்கும் நோக்கிலேயே ரம்ப் இன்றைய நிகழ்வில் இணைந்துள்ளார். கடந்த சனாதிபதி தேர்தலில் 75% இந்தியர்கள் ஹெல்லெரி கிளின்ரனுக்கே (Hillary Clinton) தமது வாக்கை அளித்ததாக கூறப்படுகிறது.
.
அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்தியர் வழிவந்தவர்கள் தொகை சுமார் 4 மில்லியன் என்று கூறப்படுகிறது. அத்தொகை அமெரிக்காவின் சனத்தொகையின் சுமார் 1% என்று ஆகும். Texas மாநிலத்தில் உள்ள Huston மற்றும், சுமார் 400 km தொலைவில் உள்ள Dallas நகர்களில் சுமார் 300,000 இந்தியர்கள் உள்ளதாக Pew Research Center கூறுகிறது.
.
2002 ஆம் ஆண்டு இஸ்லாமியருக்கு எதிரான வன்முறைகளில் மோதியின் பங்கை காரணம் கூறி அமெரிக்கா 2004 ஆண்டு மோதிக்கு அமெரிக்க விசா வழங்க மறுத்து இருந்தது. ஆனால் மோதி பிரதமர் ஆகிய பின் பழைய விசயங்கள் மறந்து போயின.
.
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் இன்று $2.5 பில்லியன் பெறுமதியான LNG (Liquid Natural Gas) ஒப்பந்தமும் இடபெறவுள்ளது.
.
(how do ye என்ற தென் இங்கிலாந்து அழைப்பு முறையே Texas மாநிலத்தில் howdy ஆக மாறியது. இது hello அல்லது how are you என்று அழைப்பது போன்றது)
.