ICCயில் இருந்து வெளியேறும் ஆபிரிக்க நாடுகள்

ICC

கடந்த ஒரு மாதத்தில் 3 ஆபிரிக்க நாடுகள் International Criminal Courtலிருந்து (ICC) வெளியேறி உள்ளன. நேற்று செய்வாய் கிழமை Gambia என்ற ஆபிரிக்க நாடு தாம் ICCயில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இதற்கு முன் South Africaவும், Burundiயும் ICCயில் இருந்து வெளியேறி உள்ளன.
.
வேறு சில ஆபிரிக்க நாடுகளும் ICCயில் இருந்து வெளியேறலாம் என்று கூறப்படுகிறது. Namibiaவும், Kenyaவும் இவ்வாறு கருத்துக்களை தெரிவித்து உள்ளன.
.
குற்றமிழைக்கும் உலக தலைமைகள் அனைவரையும் விசாரணை செய்யாது, ஆபிரிக்க தலைமைகளை மட்டுமே ICC விசாரணை செய்கிறது என்று கூறியே இந்த ஆபிரிக்க நாடுகள் வெளியேறி உள்ளன. Gambia தனது கூற்றில் ICCயின் விசாரணைகள் “persecution and humiliation of people of colour, especially Africans” என்றுள்ளது.
.
ஆதாரம் இல்லாத பொய் குற்றச்சாட்டுகளுடன் சதாமை அழிக்க சென்ற அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மீதும், பிரித்தானிய பிரதமர் Blair மீதும் விசாரணைகள் செய்யாததும் ICC மீதான வெறுப்புக்கு காரணம்.
.
2002 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ICC இதுவரை 10 நாடுகளில் குற்ற விசாரணைகள் செய்துள்ளது. அதில் 9 நாடுகள் ஆபிரிக்க கண்டத்தை சார்ந்தவை.
.

தற்போதைய ICC தலைமை விசாரணையாளர் Fatou Bensoudaவும் Gambia நாட்டை சார்ந்தவர். இவர் முன்னர் Gambiaவில் நீதி அமைச்சராக இருந்தவர்.
.