ICC அமைப்பிலிருந்து ரஷ்யாவும் வெளியேறியது

ICC

ரஷ்யா சர்வதேச குற்ற நீதிமன்றம் (ICC) என்ற அமைப்பில் இருந்து வெளியேறுவதாக இன்று புதன் கூறியுள்ளது. இவ்விடயம் சார்பாக கருத்து தெரிவித்த ரஷ்யாவின் வெளிவிவகார அதிகாரி ஒருவர், ICC உண்மையில் ஒரு சுதந்திரமான அமைப்பு அல்ல என்றும், ICC அமைப்புக்கு தேவையான பலம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
.
ஆனால் ரஷ்யாவின் வெளியேற்றத்துக்கு காரணம், அண்மையில் ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்ட Crimea பகுதியில் செய்துகொண்ட சட்டவிரோத நடவடிக்கைள் என்று கருதப்படும் செயல்களை விசாரிக்க முற்பட்டதே என்று நம்பப்படுகிறது.
.
ரஷ்யா ICCயின் முழு உறுப்பினர் நாடு அல்ல. ICC உருவாக்கப்பட்டு இரண்டு வருடங்களின் பின், 2000 ஆம் ஆண்டில் ICCயின் உறுப்பினராக இணைய செய்து ஒப்பம் இட்டிருந்தாலும், அந்த உடன்படிக்கையை முறைப்படி தமது பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலம் சட்டமாக்கவில்லை (ratify).
.
தென் ஆபிரிக்கா, Burundi, Gambia ஆகிய நாடுகள் தாம் ICCயிலிருந்து விலகுவதாக ஏற்கனேவே கூறியுள்ளன. மேலும் சில ஆபிரிக்க நாடுகள் ICCயில் இருந்து விலகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவும் ICCயை புறக்கணிக்கலாம்.
.
அமெரிக்கா இவ்வாறு பில் கிளின்டன் காலத்தில், 2000 ஆம் ஆண்டில், இணங்கி இருந்திருந்தாலும், பின்னர் ஜோர்ஜ் புஷ் காலத்தில், 2002 ஆம் ஆண்டில், தாம் உறுப்பினர் விண்ணப்பத்தை இரத்து செய்திருந்தது.
.
இந்தியா, இலங்கை, சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற பல நாடுகள் என்றைக்குமே ICCயில் அங்கம் வகிக்க இணங்கியிருக்கவில்லை.
.