IS படுகொலைக்கு 39 இந்தியர் பலி, உடல்கள் கண்டெடுப்பு

Iraq

ஈராக்கில் தொழில் செய்துவந்த 39 இந்தியரை அங்கு சிலகாலம் ஆதிக்கம் செய்துவந்த IS ஆயுத குழு படுகொலை செய்திருந்தமை தற்போது உறுதியாகி உள்ளது. படுகொலை செய்யப்பட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு, DNA மூலம் உறுதியும் செய்யப்பட்டுள்ளது.
.
மேற்படி இந்திய கட்டுமான வேலையாளர் ஈராக்கின் வடமேற்கே உள்ள Mosul பெருநகருக்கு அருகில் உள்ள Badush என்ற கிராமத்தில் வைத்தியசாலை ஒன்றை கட்டும் வேலையில் ஈடுபட்டு இருந்தனர். 2014 ஆம் ஆண்டு, இப்பகுதி IS கட்டுப்பாட்டில் உள்ளபோது, இவர்கள் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டனர். தனது காலில் துப்பாக்கி சூடு பெற்ற Harjit Masih என்ற ஒருவர் மட்டும் உயிர் தப்பி இருந்தார்.
.
Harjit Masih தனது கூற்றில் “அனைவரும் தன் கண் முன்னே சுட்டு கொல்லப்பட்டனர்” என்றுள்ளார் .
.

இந்திய அரசு அண்மை காலம்வரை மேற்படி தொழிலாளர் உயிருடன் இருப்பதாகவே தொழிலாளர் குடும்பங்களுக்கு கூறி வந்துள்ளது. ஆனால் இந்திய வெளியுறவு செயலாளர் சுஷ்மா சுவராஜ் (Sushma Swaraj) தற்போது தொழிலார் படுகொலை செய்யப்பட்டதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
.