ISIS தலைவர் அல் பக்டாடி கொலை

al-Baghdadi

ISIS குழுவின் தலைவர் அல் பக்டாடி (Abu Bakr al-Baghdai) அமெரிக்க படைகளால் சனிக்கிழமை ஞாயிறு தாக்கி அழிக்கப்பட்டுள்ளார். இவருடன் பல பெண்களும், சிறுவர்களும் பலியாகி உள்ளனர். நேற்று கசிந்த இந்த செய்தியை, அமெரிக்க சனாதிபதி இன்று ஞாயிறு அறிவிப்பு மூலம் உறுதி செய்துள்ளார். தாக்குதலின்போது அல் பக்டாடிசிரியாவின் Idlib என்ற மேற்கு மாநிலத்தில் மறைந்து வாழ்ந்தார். சுற்றிவளைப்பின்போது இவர் தனது கவச ஆடையை வெடிக்க வைத்துள்ளார்.
.
இந்த தாக்குதலுக்கு ரஷ்யா, துருக்கி, சிரியா, ஈராக் ஆகிய நாடுகள் உதவியதாக ரம்ப் கூறியுள்ளார். ஈராக்கின் அரச உளவு படையே அல் பக்டாடியின் மறைவிடத்தை CIA க்கு வழங்கியதாக கூறப்படுகிறது.
.
1971 ஆம் ஆண்டு ஈராக்கில் பிறந்த இவர் சதாமுக்கு பின்னரான காலத்தில் அமெரிக்காவினால் கைது செய்யப்பட்டு அமெரிக்க படைகளின் Camp Bucca வில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார். பின்னர் இவர் விடுவிக்கப்பட்டு இருந்தார்.
.
2014 ஆம் ஆண்டு முதல் இவர் ஈராக்-சிரியா எல்லையோரம் பெரும் நிலத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்து கொடுமையான ஆட்சி செய்துவந்தார்.
.
2017 ஆம் ஆண்டில் இவரின் கைதுக்கு உதவுவோருக்கு அமெரிக்கா $25 மில்லியன் சன்மானம் வழங்கவுள்ளதாக கூறியிருந்தது.
.