Julian Assange பிரித்தானியாவில் கைது

JulianAssange

ஜூலியன் அசான்ச் (Julian Assange, வயது 47) இன்று பிரித்தானியாவில் உள்ள எக்குவடோர் (Ecuvador) தூதுவரகத்தில் பிரித்தானிய போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். கைதை தவிர்க்கும் நோக்கில் இவர் கடந்த 7 வருடங்களாக, 2012 ஆம் ஆண்டு முதல், இந்த தூதுவரகத்தில் தஞ்சம் அடைந்திருந்தார்.
.
இவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும்படி கேட்டுள்ளதாலேயே இவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அமெரிக்காவின் அரச கணனிகளை சட்டவிரோதமாக ஊடுருவி, அவற்றில் இருந்து பெறப்பட்ட தரவுகளை பகிரங்கம் செய்தார் என்பதே இவர் மீதான குற்ற சாட்டாகும்.
.
இவர் மீது சுவீடனிலும் ஒரு வழக்கு இருந்துள்ளது. ஆனால் அந்த வழக்கு தற்போது இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
.
இவர் 2006 ஆம் ஆண்டில் விக்கிலீக்ஸ் (Wikileaks) இணையத்தை ஆரம்பித்தார். அதன் மூலம் இவர் அமெரிக்க படைகள் ஈராக்கில் பொதுமக்களை ஹெலி தாக்குதல் மூலம் படுகொலை செய்வதையும் பகிரங்கம் செய்தார். தொடர்ந்தும் பல ஊழல், அரச சட்டவிரோதங்கள் போன்ற பல உண்மைகளை பகிரங்கம் செய்திருந்தார்.
.
இன்று Ecuador தூதுவரகம் விடுத்த அழைப்பின் பின்னரே பிரித்தானிய போலீசார் கைதை செய்துள்ளனர். அரசியல் அழுத்தங்களே இதற்கு காரணம் என்று கருதப்படுகிறது.

.