June 30 இல் மேலுமொரு Leap second

Time235960

ஒரு நாள் 24 மணித்தியாலங்களை (86400 seconds) கொண்டது என்றே நாம் அறிவோம். அத்துடன் அந்த கணிப்பு எமது அன்றாட வாழ்வுக்கும் போதுமான கணியம். ஆனால் எல்லா நாட்களும் ஒன்றுக்கு ஒன்று சமமானது அல்ல. ஒரு 100 வருடத்துக்கு முந்திய நாள் ஒன்றைவிட இன்றைய நாள் ஒன்று சுமார் 1.7 மில்லி seconds அதிகமானதே. அதற்கு காரணம் பூமி தன்னை தானே சுற்றும் வேகம் படிப்படியாக குறைந்து வருவதே.
.
ஆனால் நாம் இன்று பாவனை செய்யும் கடிகாரங்கள் atomic கடிகாரங்களை கொண்டு அளவீடு செய்யப்படும் atomic நேரத்தை அடிப்படையாக கொண்டன. அதையே நாம் UTC நேரம் என்கிறோம். இந்த கடிகாரம், இயற்கையாக நாள் ஒன்றின் அளவு இழுபட்டு செல்வதை கணிப்பில் கொள்ளவில்லை. அதனால் இயற்கையான நாள் ஒன்றின் அளவுக்கும் நாம் உருவாக்கிய கடிகார நாள் ஒன்றின் அளவுக்கும் இடையில் படிப்படியாக வேறுபாடு அதிகரிக்கிறது.
.
இந்த வேறுபாட்டை திருத்தம் செய்வதற்கு Leap Second இணைக்கும் முறையை 1972 ஆண்டு முதல் ஆரம்பித்து இருந்தனர். அதன்படி அவ்வப்போது June 30 அன்று அல்லது December 31 அன்று ஒரு second ஐ மேலும் சேர்ப்பார். அதாவது June 30 அன்று அல்லது December 31 அன்று மணி 23:59:59 பின்னர் 23:59:60 ஆகி அதன் பின் 24:00:00 ஆகும். மற்றைய சாதாரண நாட்களில் 23:59:59 அடுத்த second இல் 24:00:00 ஆக மாறும்.
.
இந்த முறையின் பிரகாரம் அடுத்த மாதம் 30 திகதி மேலும் ஒரு second எமது கடிகாரத்துக்கு சேர்க்கப்படும். 1972 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை மொத்தம் 25 second கள் இணைக்கப்பட்டுள்ளன. அடுத்த மாத இணைப்புடன் மொத்தம் 26 second கள் இணைக்கப்பட்டு இருக்கும்.
.
இதற்கு முன் 2012 ஆம் ஆண்டு June 30 அன்று 1 leap second உம் அதற்கு முன் 2008 ஆம் ஆண்டு December 31 அன்று 1 leap second உம் இணைக்கப்படு இருந்தது. 1972 ஆம் ஆண்டு மட்டும் June 30 அன்று 1 second உம் , December 31 அன்று 1 second உம ஆக மொத்தம் 2 seconds இணைக்கப்பட்டு இருந்திருந்தது. சில வருடங்களில் எந்த மாற்றமும் செய்யப்பட்டு இருக்கவில்லை.
.
இந்த விடயம் கணணி உலகுக்கு பெரும் தொல்லையாக உள்ளது. Leap second இணைப்புக்கு பதிலாக அவர்கள் வேறு சில மாற்று முறைமைகளையும் முன்வைத்துள்ளனர். அம்முறைமைகள் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன. வரும் November மாதம் 2 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ள World Radio-communication Conference இல் இதுபற்றி ஆராயப்படும்.
.

2012 ஆம் ஆண்டு 1 second ஐ இணைத்த பின் Linux OS மூலம் இயங்கும் சில கணனிகள் சிறு குழப்பங்களுக்கு உள்ளாகி இருந்தன. உதாரணமாக ஆஸ்திரேலியாவின் Qantas Airways கணனிகள் சிறு குழப்பங்களுக்கு உள்ளாகி இருந்தன.