Recent Comments

    Life of Pie நடிகர் Irrfan Khan மரணம்

    Irrfan_Khan

    Life of pie, Slumdog Millionaire ஆகிய திரைப்படங்களில் நடத்திருந்த Irrfan Khan தனது 53 ஆவது வயதில் புற்றுநோய்க்கு (neurodocrine tumour) பலியாகினார். இவரின் மரண செய்தியை இன்று புதன்கிழமை அவரது பேச்சாளர் அறிவித்து உள்ளார். கடந்த சில தினங்களாக இவர் மும்பாய் வைத்தியசாலை ஒன்றில் வைத்தியம் பெற்றுவந்திருந்தார்.
    .
    1988 ஆம் ஆண்டு Salaam Bombay என்ற படத்தில் ஒரு சிறிய பங்கில் நடித்து இவர் தனது நடிப்பு வாழ்வை ஆரம்பித்து இருந்தார். இந்திய திரைப்படங்களில் மட்டுமல்லாது ஆங்கில திரைப்படங்களிலும் இவர் நடிக்க ஆரம்பித்தார்.
    .
    இவர் நடித்திருந்த Jurassic World (2015), Life of Pi (2012), The Amazing Spiderman (2012), Silumdog Millionaire (2008) ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடக்கூடியவை.
    .
    2011 ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் கலைத்துறைக்கான பத்ம ஸ்ரீ (Padma Shri) விருது வழங்கப்பட்டு இருந்தது. இந்த விருது பொதுமகன் ஒருவருக்கு வழங்கப்படும் 4 ஆவது உயரிய விருதாகும்.
    .
    1995 ஆம் ஆண்டு திருமணமான இவருக்கு இரண்டு மகன்கள் உண்டு.
    .