Meng விடுதலைக்கு பின் கனேடியர்களும் விடுதலை

Meng விடுதலைக்கு பின் கனேடியர்களும் விடுதலை

இன்று வெள்ளி அமெரிக்கா Huawei நிறுவனத்தின் chief financial officer Meng மீதான வழக்கை deferred prosecution agreement மூலம் பின்வாங்கியதை தொடர்ந்து கனடா அவரை விடுதலை செய்திருந்தது. அவர் தற்போது சீனாவுக்கு சென்றுகொண்டு இருக்கையில், சீனா Michael Spavor, Michael Kovrig ஆகிய இரண்டு கனேடியர்களையும் விடுதலை செய்துள்ளது.

Meng சீன விமானம் ஒன்றில் சீனாவுக்கு செல்கிறார். அதேவேளை விடுதலை செய்யப்பட்ட கனேடியர் சனிக்கிழமை கனடாவை அடைவர் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் நியூ யார்க் நேரப்படி வெள்ளி இரவு 7:30 மணிக்கு கனடாவை நோக்கிய தமது விமான பயணத்தை ஆரம்பித்து உள்ளனர்.

முன்னாள் சனாதிபதி ரம்ப் ஆரம்பித்த நாடகம் சுமார் மூன்று ஆண்டுகளின் பின் இன்று முடிவடைந்து உள்ளது. இந்த நாடகம் மூலம் அமெரிக்காவோ அல்லது கனடாவோ பயன் எதையும் அடைந்திருக்கவில்லை.