MiG பெறுமதி $7.83 மில்லியன், செலுத்தியது $15.66 மில்லியன்

MiG

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க (Udayanga Weeratunga) மீதான வழக்கு தொடர்பாக இலங்கை அரசு சமர்ப்பித்த ஆவணங்களின்படி இலங்கை அரசு 2006 ஆம் ஆண்டில் $7.83 மில்லியன் பெறுமதியான பாவித்த MiG விமானங்களுக்கும், அவற்றை பராமரிக்கும் சேவைகளுக்கும்மிகையான தொகையான $15.66 மில்லியன் பணத்தை வழங்கி உள்ளது.
.
அப்போதைய மகிந்த ராஜபக்ச அரசு மேற்படி கொள்வனவு யுக்கிரைன் மற்றும் இலங்கை ஆகிய இரண்டு அரசுகளுக்கும் நேரடியா இடையில் செய்யப்பட்ட ஒப்பந்தம் என்று கூறி இருந்தாலும், உண்மையில் இந்த கொள்வனவு இடைத்தரகர் மூலமே செய்யப்பட்டுள்ளது.
.
இலங்கை FCID (Financial Crimes Investigation Division) கொழும்பு நீதிமன்றில் சமர்ப்பித்த ஆவணங்களின்படி மேற்படி கொள்வனவை இலங்கை நேரடியாக யுக்கிரைன் அரசுடன் செய்யாது, British Virgin Island இல் பதிவு செய்யப்பட்ட Bellimissa Holding Limited மூலமாகவே செய்துள்ளது. அத்துடன் $15.66 மில்லியன் பணம் Bellimissa நிறுவனத்துக்கே வழங்கப்டுள்ளது. அப்பணத்தின் சுமார் அரை பங்கை மட்டுமே ($7.83 மில்லியன்) Bellimissa யுக்கிரைனுக்கு வழங்கி உள்ளது. மிகுதி பணம் தனிநபர் கைகளுக்கு போயுள்ளது.
.
அதேவேளை கோத்தபாய ராஜபக்ச முன்னாள் The Sunday Leader பிரதம ஆசிரியர் Lasantha Wickrematunga மீதான மானநட்ட வழக்கு ஒன்றுக்கு வழங்கிய ஆவணமும் இப்போது பகிரங்கத்துக்கு வந்துள்ளது. Mount Lavinia நீதிமன்றுக்கு வழங்கப்பட்ட அந்த certified ஆவணமும் MiG கொள்வனவு இடைத்தரகர் எதுவும் இன்றி, இரண்டு அரசுகளுக்கு இடையில் நேரடியா செய்யப்பட்டது என்கிறது. தற்போது அந்த ஆவணமும் பொய்யாகி உள்ளது. யுக்கிரைன் அரசும் தாம் இலங்கை அரசுடன் நேரடியா ஒப்பந்தம் செய்யாது, Bellimissa நிறுவனத்தின் மூலம் செயல்பட்டதை உறுதி செய்துள்ளது.
.
2009 ஆம் ஆண்டில், மேற்படி வழக்கில் சாட்சியம் செய்ய இரண்டு தினங்கள் மட்டும் இருக்கையில் Lasantha படுகொலை செய்யபட்டு இருந்தார்.
.

யுக்கிரைன் அரசின் கூற்றுப்படி, யுக்கிரைன் நிறுவனமான Ukrinmarsh மேற்படி MiG விமானங்களை சிங்கப்பூரில் உள்ள D. S. Alliance நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளது. Lee Thian Soo என்பவரே D. S. Alliance என்ற சிங்கப்பூர் நிறுவனத்துக்கும், Bellimissa நிறுவனத்துக்கும் director ஆவார்.
.