Oracle நிறுவனத்துக்கு TiTok அமெரிக்க உரிமை?

Oracle நிறுவனத்துக்கு TiTok அமெரிக்க உரிமை?

சீனாவின் TikTok செயல்பாடுகளை அமெரிக்காவில் தடை செய்யப்போவதாக அமெரிக்க சனாதிபதி ரம்ப் கூறியதன் பின் சில அமெரிக்க நிறுவனங்கள் அதன் அமெரிக்க செயற்பாட்டை கொள்வனவு செய்ய முன்வந்திருந்தன. Microsoft நிறுவனமும், Oracle நிறுவனமும் அவற்றுள் இரண்டு. ஆனால் TikTok நிறுவனத்தின் தாய் நிறுவனமான சீனாவின் ByteDance நிறுவனத்துக்கு விற்பனை செய்ய முன்வந்துள்ளது.

ஆனாலும் இந்த விற்பனை ஒரு முழுமையான விற்பனை அல்ல. TikTok உள்ளே இருக்கும் software, அதில் இருக்கும் தொழில்நுட்ப algorithm என்பன அமெரிக்காவுக்கு விற்பனை செய்யப்படாது. அவ்வாறு சீன நுட்பத்தை விற்பனை செய்வதை சீன அரசு சில தினங்களுக்கு முன் தடை செய்திருந்தது.

பதிலாக Oracle அமெரிக்க TikTok பாவனையாளரின் விபரங்களை மட்டும் அமெரிக்காவில் கொண்டிருக்கும். தேவைப்பட்டால் Oracle தமது TikTok பயன்பாட்டை மேலும் தரமாக்கலாம்.

இவ்வாறு algorithm மற்றும் source code இன்றி TikTok ஐ அமெரிக்க நிறுவனம் கொள்வனவு செய்வதை ரம்ப் விரும்புவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமது கொள்வனவு திட்டத்தை ByeDance நிராகரித்து உள்ளது என்று Microsoft ஏற்கனவே கூறி உள்ளது.