Ransomware மூலம் வைத்தியசாலை பணயம் வைப்பு

Lukas

ஜேர்மன் நாட்டு Neuss நகரில் உள்ள Lukas என்ற வைத்தியசாலை ransomware என்ற தொழில்நுட்ப வகை பணயம் வைத்தலுக்கு ஆளாகி உள்ளது. இவ்வாறு பல நிறுவனங்கள் ransomware மூலமான பாதிப்புக்கு உள்ளானாலும் ஒரு சில நிறுவனங்களே விடயத்தை பகிரங்கப்படுத்துகின்றன. ஏனையவை பணயக்காரர் கேட்கும் தொகையை வழங்கி தம்மை பாதுகாக்கின்றன.
.
தற்காலத்தில் வர்த்தக நிறுவனங்கள், வைத்தியசாலைகள் போன்ற எல்லா நிறுவனங்களும் தமது தரவுகளை கணனிகளில் சேமித்து வைக்கின்றன. அந்த கணனிகள் Internet தொடர்பையும் கொண்டிருக்கின்றன. சிலவேளை உலகின் எங்காவது ஒரு மூலையில் உள்ள hacker, ransomware ஒன்றை அந்த நிறுவன கணணிகளுள் புகுத்தி, அந்நிறுவன தரவுகளை குழப்பி வைப்பார் (encrypt). பின் அந்த நிறுவனத்தை அழைத்து குறித்த ஒரு தொகையை தந்தால் குழப்பி வைத்துள்ள தரவுகளை மீண்டு திருத்த (decrypt) வழி செய்வதாக கூறுவார். தம்கையில் இருக்கும் குழம்பிப்போன தரவுகளை முறைப்படி பயன்படுத்த முடியாமல் பதிக்கப்பட்ட நிறுவனங்கள் தவிக்கும்.
.
Lukas வைத்தியசாலையில் தற்போது எல்லா நடவடிக்கைகளையும் பேனை, பேப்பர் கொண்டே செய்யப்படுகிறது. அங்கு கணனிகள் இயங்குவதில்லை. வைத்தியர்கள் நோயாளிகளின் தவுகளை பெறமுடியாது திண்டாடுகிறார்கள். Lukas பணய தொகையை செலுத்தாது தமது கண்ணனி வல்லுனர்களை பயன்படுத்தி தாமே தரவுகளை திருத்த முனைகிறது.
.

அண்மையில் அமெரிக்காவின் Hollywood பகுதில் உள்ள வைத்தியசாலை ஒன்றும் இவ்வகை பணயம் வைப்புக்கு ஆளாகி, பின் U$17,000 பணய தொகை வழங்கி தப்பித்துக்கொண்டது. பணய தொகை bitcoin என்ற Internet நாணயம் மூலம் செலுத்தப்பட்டுள்ளது. Bitcoin தடயங்களை தேடுவது மிக கடினம்.
.