Uyghur கருத்தால் சர்ச்சைக்கு உள்ளான Palihapitiya

Uyghur கருத்தால் சர்ச்சைக்கு உள்ளான Palihapitiya

இலங்கையில் பிறந்து கனடாவிலும், அமெரிக்காவிலும் குடியுரிமை கொண்ட Chamath Palihapitiya சீனாவின் Uyghur இனம் தொடர்பாக தெரிவித்த கருத்து சர்ச்சையாகி உள்ளது.

இவர் தானும், தன்னைப்போல் பல அமெரிக்கர்களும் Uyghur இனத்தவர்களின் விசயத்தில் அக்கறை கொண்டிருக்கவில்லை (don’t care) என்று கூறியுள்ளார். ஆனால் இவர் பின்னர் தனது கூற்றை மாற்றி உள்ளார்.

இவரின் தந்தையார் Ottawa நகரில் பணியாற்றியவர். 1986ம் ஆண்டு தந்தையாரின் பணி முடிந்து இருந்தாலும், இலங்கை இனக்கலவரத்தை காரணம் காட்டி குடும்பத்துடன் அகதி நிலை பெற்று இருந்தனர்.

மகன் Facebook நிறுவனத்தில் ஆரம்பத்தில் இணைந்து இருந்தார் (2007 to 2011). அதன் மூலம் பெரும் செல்வதை பெற்று இருந்தார். இவரிடம் $1.2 பில்லியன் உள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு தடவைகள் திருமணம் செய்த இவருக்கு 4 பிள்ளைகள் உண்டு.