VoLTE, அடுத்த வகை தொலைபேசி நுட்பம்

VoLTE

முதலில் பாவனைக்கு வந்திருந்தது முனைக்கு-முனை பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட (dedicated) copper கம்பிகளால் தொடுக்கப்பட்ட தொலைபேசி முறைமை. அழைக்கப்படும் நபர் அழைக்கும் நபரின் அடுத்த வீட்டில் இருந்தால் என்ன, அடுத்த கண்டத்தில் இருந்தால் என்ன, அவர்களின் தொலைபேசிகள் copper wire களினால் உரையாடல் தொடரும் வரை இணைக்கப்பட்டு இருந்தன. முதலில் இந்த இணைப்பு வேலைகளை மனித இணைப்பாளர்களே செய்து வந்திருந்தனர். பின்னர் தொழில் நுட்பம் நிறைந்த இலத்திரனியல் உபகரணங்கள் இந்த இணைப்புக்களை இணைத்து வந்தன. இணைப்பை மனிதன் இணைந்தால் என்ன, உபகரணம் இணைத்தால் என்ன, இறுதியில் இரு முனைக்கும் இடையில் உரையாடல் முடியும்வரை ஒரு பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட copper wire இணைப்பு இருக்கும். உரையாடலின் பின் அவ்வுரையாடலுகென பிரத்தியேகமாக தொடுக்கப்பட்ட இணைப்பு துண்டிக்கப்படும். இவ்வகை தொலைத்தொடர்பு இணைப்பை PSTN (Public Switched Telephone Network) என்று அத்துறையுள் உள்ளோர் அழைப்பர். இது ஒரு analog signal சேவை (மற்றையது digital signal). சாதாரண மக்கள் இதை Land Line என்றும் அழைப்பர். ஆனால் ஆதியில் இருந்த Land Line மட்டுமே முழுமையான PSTN சேவை. சமீப கால Land Line களின் சில பகுதிகள் PSTN சேவையாக இருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பதிலாக digital signal களும் பயன்படுத்தட்டு இருந்திருக்கலாம்.
.
இந்த PSTN தொழில்நுட்பம் மிக நீண்ட காலம் உலகம் முழுவதும் சேவை செய்து வந்திருந்தது. இன்றும் பல நாடுகளில் இதுவே பிராதன தொலைபேசி சேவையாக உள்ளது. ஒவ்வொரு உரையாடலும் தனக்கென்று ஒரு copper wire இணைப்பை கொண்டிருப்பதால் இவ்வகை சேவையில் நமைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. நன்மைகளுள் 1) துல்லியமான ஒலி (clear voice), 2) துண்டிக்கப்படாத சேவை (no dropped service) ஆகிய இரண்டும் பிரதானம். தீமைகளுள் 1) அதிக சேவைக்கட்டணம், 2) மேலதிக சேவைகளை செய்ய முடியாமை (unable to add new features) என்பன அடங்கும்.
.
பின்னர் தொலைபேசி இரண்டு திசைகளில் வளர ஆரம்பித்தது: ஒன்று முனைகளில் PSTN இணைப்பையும் (Analog Signal), இடையில் Internet ஐயும் (Digital Signal) பயன்படுத்தி தொலைதொடர்பாடல். இம்முறையால் தொலைதூர தொலைபேசி சேவை கட்டணத்தை குறைக்க முடிந்திருந்தது. அதேவேளை மாறாக உரையாடலின் தரம் (sound quality) குறைந்தது. Phone Card மூலம் கதைப்பது இவ்வகையினை சாரும். Inter ஐ பயன்படுத்தும் தொலைபேசி சேவையை பொதுவாக வொய்ப் (VoIP) சேவை என்பர் (Voice over Internet Protocol). VoIP சேவையில் பிரத்தியேகமாக copper wire இணைக்கப்படுவது இல்லை, பதிலாக எல்லோரும் பாவிக்கும் Internet இணைப்பே பயன்படும். கணணிக்கு-கணணி Skype சேவைகள் VoIP வகை சேவையை மட்டுமே கொண்டிருக்கும்.
.
PSTNஉம், VoIPஉம் கலந்த சேவையில், முனைகளில் உள்ள PSTN சேவைகள் மட்டுமே அதிக சேவை கட்டணங்களை கொண்டன. Internet ஐ பயன்படுத்தும் நடுவில் உள்ள VoIP பாகம் பிரத்தியேக இணைப்பை (dedicated wire) கொண்டிருக்காது, பதிலாக எல்லோரும் பாவிக்கும் Internet இணைப்பை பயன்படுத்தும். அதனால் VoIP பாகம் குறைந்த கட்டணத்தையே கொண்டது.
.
VoIP வளர்ந்த காலத்திலேயே Cell phone சேவையும் வளர ஆரம்பித்திருந்தது. முதலில் வந்த cell phoneகளுக்கும் cell phone transmission tower களுக்கும் இடையில் வளிமார்க்க Analog signal மூலம் தொடர்ப்பை ஏற்படுத்தியிருந்தன. அதேவேளை tower களுக்கு இடையில் பழைய PSTN முறை நுட்பம் பாவிக்கப்பட்டிருந்தது. சில சந்தர்ப்பங்களில் cell phone சேவை, PSTN சேவை, VoIP சேவை போன்ற மூன்று சேவைகளையும் அடக்கிய தொலை தொடர்பாடல்கள் இடம்பெற்று இருந்தன. உதாரமாக ஒருவர் தனது cell phone மூலம் ஒரு phone-card சேவையை பாவித்து தொலைதூரம் கதைப்பின் அவர் cell சேவை, PSTN சேவை, VoIP சேவை ஆகிய மூன்றையும் பயன்படுத்தியிருப்பார்.
.
இந்த வரிசையில் இறுதியாக வந்துள்ளது VoLTE (Voice over Long Term Evolution) தொலைபேசி சேவை. இது முன்னர் பயன்படுத்தப்பட்ட வளி மூல Analog Signal சேவைக்கு பதிலாக வளி மூல Digital Signal ஐ பயன்படுத்துகிறது. அதாவது ஒரு கணனிக்கு Internet கொடுக்கும் சேவைக்கு நிகரான சேவையை VoLTE சேவை smart cell phone களுக்கு வழங்குகிறது. அதனால் smart phone என்று அழைக்கப்படும் வல்லமை நிறைந்த cell phone கள் முனைக்கு-முனை VoLTE சேவையை பயன்படுத்தி தொலைதொடர்பாட வழிவகுக்கிறது.VoLTE சேவையும் VoIP சேவையும் SIP (Session Initiation Protocol) என்ற நுட்பத்தையே முதன்மையாக பயன்படுத்தும்.
.
VoLTE சேவையை கொண்ட smart phoneகள் தொலைதொடர்பாடல் செய்யும் அதேவேளை video மூலம் மறுமுனையை பார்ப்பது, internetஐ பாவிப்பது போன்ற பயன்பாடுகளையும் செய்ய வசதி செய்யும். இதற்கு 4G அல்லது LTE சேவை அவசியம். முன்னைய 3G, 2G போன்ற சேவைகளின் bandwidth VoLTE சேவைக்கு போதுமானது அல்ல. VoLTE packet-switched ஆக இருக்க 3G அல்லது அதற்கு முற்பட்ட சேவை circuit-switched ஆனதாக இருக்கும்.
.
பயணித்துக்கொண்டு இருக்கும் ஒருவர் VoLTE tower ஒன்றுக்கு அருகில் இருக்கும் போது  cell phone உரையாடல் ஒன்றை ஆரம்பித்தால் அச்சேவை அவர் முனையில் VoLTE சேவையாக இருக்கும். ஆனால் அவர் பயணம் VoLTE tower இக்கு அப்பால் சென்று, வேறு ஒரு 3G tower இக்கு அருகில் சென்றால், சேவை உடனடியாக 3G சேவையாக மாறும் – சேவை துண்டிப்பு இன்றியே அது நடைபெறும்.
.
VoLTE சேவையை செய்யக்கூடிய smart phone கள் தற்போதுதான் சந்தைக்கு வர ஆரம்பித்துள்ளன. உதாரணமாக iPhone6, iPhone6 Plus, Samsung Galaxy 4s, 5 போன்ற அண்மையில் வெளிவந்த சில smart phone கள் VoLTE வசதிகள் கொண்டன. அத்துடன் தற்போதுதான் cell phone  சேவை நிறுவனங்கள் VoLTE tower களை அமைக்க ஆரம்பித்துள்ளன.
.