Yemenனில் சவுதி cluster குண்டுகளை பாவித்தது

ClusterBomb

சிரியாவைப்போல் சவுதிக்கு தெற்கே உள்ள யெமென் (Yemen) என்ற நாட்டிலும் வெளிநாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு பன்முக யுத்தம் நடைபெறுகிறது. அந்நாட்டின் அரச தரப்புக்கு சவுதியும் சிறுபான்மை இனத்தை கொண்ட எதிர் தரப்புக்கு ஈரானும் உதவி வருகின்றன. எதிர்தரப்பு கட்டுப்பாடில் வைத்துள்ள இடங்களில் சவுதி தமது யுத்த விமானங்கள் மூலம் குண்டுகளை போடுகிறது.
.
Human Rights Watch (HRW) என்ற அமைப்பு வெளிட்ட அறிக்கையின்படி சவுதி அங்கு அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட cluster குண்டுகளை குடியிருப்பு பகுதிகளில் வீசியுள்ளதாம். இந்த குண்டுகளை மக்கள் குடியிருப்பு பகுதிகளில் வீசுவது சர்வதேச மட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் 2008 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த இந்த தடையில் ஒப்பமிட்டு இருக்கவில்லை. பதிலாக அவ்வாறு குடியிருப்பு பகுதிகளில் cluster குண்டுகளை வீசும் நாட்டுகளுக்கு அவ்வகை ஆயுதங்களை விற்பனை செய்வது அமெரிக்க சட்டப்படி குற்றமாகும்.
.
இதற்கு முன், கடந்த மாதம் 6ஆம் திகதியும் இவ்வகை குண்டுகளை சவுதி யெமென் தலைநகர் Sanaவில் வீசியிருந்ததாகவும் HRW கூறி இருந்தது.
.

சவுதியால் பாவிக்கப்பட்ட cluster குண்டுகள் அமெரிக்காவின் தயாரிப்பான CBU-105 Sensor Fuzed Weapon என்றும் HRW தெரிவித்துள்ளது.
.