அமெரிக்கரில் 64% சனநாயகத்தில் சந்தேகம்

அமெரிக்கரில் 64% சனநாயகத்தில் சந்தேகம்

தம்மை சனநாயகத்தின் பாதுகாவலர் என்று நீண்ட காலம் கருதி வந்த அமெரிக்கரில் 64% மக்கள் தற்போது சனநாயகம் மீது சந்தேகம் கொள்ள ஆரம்பித்துள்ளனர் என்று கூறுகிறது கருத்து கணிப்பு ஒன்று.

அமெரிக்காவின் NPR, Ipsos poll ஆகிய இரண்டு அமைப்புக்களும் இணைந்து செய்த கணிப்பு ஆய்வில் 64% அமெரிக்கர் சனநாயகத்தில் சந்தேகம் கொண்டமை தெரிய வந்துள்ளது.

வலதுசாரிகளை (Republican) மட்டும் கருத்தில் கொண்டால் சுமார் 66.6% மக்கள் சனநாயகத்தில் சந்தேகம் கொண்டுள்ளனர். இவர்கள் கடந்த தேர்தலில் பைடென் வெற்றி கொள்ளவில்லை என்றும், ரம்பே வெற்றி கொண்டதாகவும் கருதுகின்றனர்.

தற்காலங்களில் மக்கள் பொய்யான செய்திகளில் ஊறிப்போக பிரிவினையை வளர்த்து இலாபம் பெறும் ஊடகங்களும், Facebook போன்ற பொய்ச்செய்தி தளங்களுமே காரணம்.

2021ம் ஆண்டு ஜனவரி 6ம் திகதி அமெரிக்க காங்கிரஸ் மீது இடம்பெற்ற தாக்குதல் மீண்டும் 2024ம் ஆண்டுக்கான தேர்தலின் பின் இடம்பெறலாம் என்றும் கருதப்படுகிறது.

சனநாயகம் அற்ற சீனா அறிவில், பொருளாதாரத்தில் வேகமாக வளர்வதும் சனநாயகம் நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமானதா என்ற கேள்விக்குறியையும்  தோற்றுவித்து உள்ளது.