அமெரிக்கா-சீனா இடையே மீண்டும் இராணுவ தொடர்பு

அமெரிக்கா-சீனா இடையே மீண்டும் இராணுவ தொடர்பு

அமெரிக்க இராணுவத்துக்கும் சீன இராணுவத்துக்கும் இடையேயான நேரடி தொடர்பு மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. அமெரிக்க சனாதிபதி பைடெனும் சீன சனாதிபதி சீயும் இந்த இந்த தீர்மானத்தை நேற்று புதன் எடுத்துள்ளனர்.

கலிபோர்னியாவின் San Francisco நகரில் இடம்பெறும் APEC நிகழ்வில் கலந்து கொள்ளும் இவர்கள் தமது நேரடி சந்திப்பின் பின் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

2022ம் ஆண்டு அமெரிக்காவின் House speaker நான்சி பெலோஷி தாய்வான் சென்றபின் அதற்கு தண்டனையாக சீனா இரண்டு நாடுகளின் இராணுவங்களுக்கு இடையிலான நேரடி தொடர்பை துண்டித்து இருந்தது.

அமெரிக்காவும் மீண்டும் ஒரு சீனா (One China) கொள்கையை உறுதிப்படுத்தி உள்ளது. அக்கொள்கை தாய்வான் அடங்கலாக சீனா ஒரு நாடு என்றும், பெய்ஜிங் சீனாவின் தலைநகர் என்றும் கூறுகிறது.

தொழில்நுட்பம், வர்த்தகம் உட்பட மேலும் பல விசயங்கள் பேசப்பட்டாலும் அவை தொடர்பாக இரு தரப்பும் கருத்துக்கள் எதையும் கூறவில்லை.