அமெரிக்க வெள்ளையர் சீன hockey அணியில்

அமெரிக்க வெள்ளையர் சீன hockey அணியில்

அமெரிக்கரான 32 வயது Jeremy Smith Beijing 2022 Winter ஒலிம்பிக் போட்டியில் சீனாவின் hockey அணியின் goalie ஆக விளையாடினார். வியாழக்கிழமை அமெரிக்க அணிக்கும் Jeremy Smith அங்கம் வகிக்கும் சீன அணிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் அமெரிக்கா 8 க்கு 0 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி கொண்டது.

ஆனாலும் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஜெர்மனிக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டியில் ஜெர்மனி 3 புள்ளிகளை பெற, சீனா 2 புள்ளிகளை பெற்றது.

சீன hockey அணியில் 2/3 அளவிலான வீரர்கள் வெளிநாடுகளில் பிறந்தவர். அதில் 3 அமெரிக்கர், 11 கனடியார், 1 ரஷ்யர் அடங்குவர். சீன அணியின் Captain கனடியரான Brandon Yip ஆவார். இவர் 174 NHL போட்டிகளில் விளையாடி இருந்தவர். கனடாவின் பிரபல வீரர் Wayne Gretzky சீன அணிக்கு ஆலோசகராக உள்ளார்.

அறவே hockey அணி இல்லாத சீனா இறக்குமதி செய்த வீரர் மூலம் உள்நாட்டு hockey ஆர்வத்தை வளர்க்க முனைகிறது.

Olympic Rule 41 கூற்றுப்படி ஒலிம்பிக் போட்டிகளில் அந்த நாடுகளில் குடியுரிமை கொண்டவரே போட்டியிடலாம். அதேவேளை அமெரிக்கா இரட்டை குடியுரிமையை அனுமதித்தாலும், சீனா இரட்டை குடியுரிமையை அனுமதிப்பது இல்லை. அதனால் சீனா சார்பில் போட்டியிடும் வீரர்கள் சீன குடியுரிமையாளர் என்றே ஒலிம்பிக்கில் கணிக்கப்படும்.

சோவியத் யூனியன் உடைந்த காலத்தில் பல முன்னாள் சோவியத் வீரர்கள் அமெரிக்கா, கனடா அக்கால செல்வந்த நாடுகளுக்கு சென்று விளையாடி இருந்தனர். தற்போது அமெரிக்க, கனடிய வீரர்கள் சீனா செல்கின்றனர்.