தேர்தல் காலத்தில் முன்னாள் பாகிஸ்தான் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரின் PTI கட்சி மிரட்டப்பட்ட நிலையில் அவரின் ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிட்டோர் பலரும் வென்றுள்ளனர்.
இதுவரை வெளியிடப்பட்ட 250 முடிவுகளின்படி இம்ரானின் PTI கட்சி ஆதரவாளர் 99 பேர் வென்றுள்ளனர். PMLN கட்சி 71 ஆசனங்களை வென்றுள்ளது. முன்னாள் பிரதமர் பெனர்சிஸ் பூட்டோவின் மகனின் தலைமையை கொண்ட PPP கட்சி 53 ஆசனங்களை வென்றுள்ளது. ஏனைய கட்சிகள் 27 ஆசனங்களை வென்றுள்ளன.
பாகிஸ்தான் இராணுவத்தின் ஆதரவு கொண்ட PMLN கட்சியின் Nawaz Sharif அண்மையிலேயே தேர்தலுக்காக நாடு திரும்பி இருந்தார். அவர் இராணுவத்தின் உதவியுடன் ஆட்சியை கைப்பற்ற முனையலாம்.
ஏனைய தேர்தல் முடிவுகளை வெளியிடும் பணி தற்போது இழுத்தடிக்கப்படுகிறது. அதனால் குளறுபடிகள் இடம்பெறலாம் என்ற அச்சமும் தோன்றியுள்ளது.