இலங்கையின் டாலர் கையிருப்பு $50 மில்லியன் மட்டுமே

இலங்கையின் டாலர் கையிருப்பு $50 மில்லியன் மட்டுமே

இலங்கையின் தற்போதைய டாலர் கையிருப்பு (foreign reserve) $50 மில்லியனிலும் குறைவு என்று கூறியுள்ளார் நிதி அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry). இரண்டு மாதங்களுக்கு முன் இத்தொகை $2.3 பில்லியன் ஆக இருந்தது. கடந்த 2 ஆண்டுகளில் டாலர் இருப்பு சுமார் 70% ஆல் வீழ்ச்சி அடைந்து உள்ளது.

இலங்கை தான் பெறும் வருமானத்துக்கும் அதிகமான அளவில் செலவு செய்வதாக கூறப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டில் இலங்கையின் மொத வருமானம் 1,500 பில்லியன் இலங்கை ரூபாய்கள் என்றும் ஆனால் அதே ஆண்டில் இலங்கை 3,522 பில்லியன் இலங்கை ரூபாய்களை செலவழித்து உள்ளது என்றும் கூறப்படுகிறது.

இலங்கையிடம் தற்போது சுமார் $52 பில்லியன் கடன் உள்ளது. இந்த ஆண்டு மட்டும் சுமார் $7 பில்லியன் கடன் அடைக்கப்படல் அவசியம். சீனா, இந்தியா, IMF, Worldbank ஆகியற்றிடம் இருந்து கடன் பெற்று கடனை அடைக்க முடியாது.

இலங்கை அரசின் வரி வருமானத்தை GDPயின் 14% ஆக்கவும் திட்டம் முன்வைக்கப்பட்டு உள்ளது. அதாவது வரி அதிகரிப்புகள் விரைவில் இடம்பெறலாம். தற்போது வரி GDPயின் 8.7% ஆக மட்டுமே உள்ளது.

பல நூறு மில்லியன் டாலர்களை கொண்ட பல் இலங்கை அரசியல் புள்ளிகள் தற்போது இலங்கையிலும் அதிக செல்வந்தர்களாக உள்ளனர்.