இலங்கை சிங்களவரை பாகிஸ்தானில் எரித்து கொலை

இலங்கை சிங்களவரை பாகிஸ்தானில் எரித்து கொலை

இஸ்லாமிய வன்முறை கூட்டம் ஒன்று பிரியந்த குமார என்ற இலங்கை சிங்களவரை தாக்கி, எரித்து கொலை செய்துள்ளது. கொலை செய்யப்பட்டவர் இஸ்லாமிய மதத்தை இழிவு செய்துள்ளார் என்பதே கொலை கூட்டம் கூறிய காரணம்.

பிரியந்த குமார என்ற இலங்கையர் பாகிஸ்தானில் உள்ள விளையாட்டு உபகரணம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று manager பதவியில் இருந்தவர். இவர் இஸ்லாமிய மதத்தை இழிவு செய்தார் என்று அங்கு தொழில் செய்யும் சிலர் கூறியுள்ளனர். அதன் பின்னரே வன்முறை கும்பல் அங்கு வந்து இலங்கையரை தாக்கி, தீ வைத்து கொலை செய்துள்ளது.

பலியானவர் எரிந்த வேளையில் நூற்றுக்கணக்கானோர் சூழ இருந்து கொண்டாடி உள்ளனர். இந்த வீடியோ படங்கள் இணையத்தில் பதியப்பட்டு உள்ளன.

பாகிஸ்தான் இராணுவ தலைவர் ஜெனரல் Qamar Javed Bajwa இந்த கொலையை “cold-blooded murder” என்று அழைத்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இக்கொலைக்கு கவலை தெரிவித்து உள்ளார்.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேசம் ஆகிய நாடுகளில் பெரும்பான்மை மத குழுக்கள் சட்டத்தை தமது கையில் எடுப்பதும், அப்போது அந்நாடுகளின் போலீசார் மறுபக்கம் பார்ப்பதுவும் வளமை.