இஸ்தான்புல் ஊடே இன்னோர் கால்வாய்

இஸ்தான்புல் ஊடே இன்னோர் கால்வாய்

துருக்கிக்கு வடக்கே உள்ள கருங்கடலையும், தெற்கே உள்ள Mediterranean கடலையும் தற்போது இணைப்பது இயற்கை உருவாக்கிய Bosporus கால்வாய் (Strait of Istanbul). ஆனால் அந்த இரு கடல்களையும் இணைக்க துருக்கி இன்னோர் கால்வாயையும் கட்டவுள்ளது. இந்த புதிய கால்வாய்க்கான அடிக்கல்லை அந்நாட்டு சனாதிபதி Recep Tayyip Erdogan இன்று சனிக்கிழமை பதித்துள்ளார்.

சுமார் 45 km நீள புதிய கால்வாய் கட்டுமானத்துக்கு சுமார் $15 பில்லியன் செல்வாகும் என்றும், சுமார் 6 ஆண்டுகள் தேவை என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.

தற்போதைய Bosporus கால்வாய் சிறியது என்றும், அதிகரித்துவரும் தொகை காரணமாக கப்பல்கள் காத்திருந்தே அதனுடு பயணிக்கின்றன என்றும் கூறப்படுகிறது. ஆண்டு ஒன்றில் சுமார் 25,000 கப்பல்கள் மட்டுமே இந்த கால்வாயூடு பாதுகாப்பாக பயணிக்கலாம் என்றும், ஆனால் தற்போது ஆண்டு ஒன்றில் சுமார் 43,000 கப்பல்கள் பயணிப்பதாகவும் கூறப்படுகிறது. 2050ம் ஆண்டு அளவில் இத்தொகை 78,000 ஆக அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது. புதிய கால்வாய் ஒரு மாற்றுவழியாக இருக்கும்.

சூழலில் அக்கறை கொண்டோர் இந்த மனிதம் உருவாகும் கால்வாய் சூழலுக்கு பாதிப்பை உருவாகும் என்றுள்ளனர். மறுபுறம் துருகியிடம் இவ்வளவு பணம் இல்லை என்றும் இன்னோர் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கான முதலீடும் சீனாவில் இருந்து பெறப்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

சுயஸ் கால்வாய் மொத்தம் 193 km நீளம் கொண்டது. பனாமா கால்வாய் 82 km நீளம் கொண்டது. இவற்றின் வழியே சில இயற்கை உருவாக்கிய கால்வாய்கள், வாவிகள் ஆகியனவும் உண்டு.