கடனில் முறியும் இலங்கைக்கு மேலும் 21 விமானங்கள்

கடனில் முறியும் இலங்கைக்கு மேலும் 21 விமானங்கள்

தான் பெற்ற கடன்களை திருப்பி அடைக்க முடியாது என்று கையை உயர்த்தும் இலங்கை அரசு இலங்கையின் Srilankan விமான சேவைக்கு குத்தகை (lease) அடிப்படையில் மேலும் 21 பெரிய விமானங்களை பெற முனைகிறது.

Srilankan விமான சேவை இலாபத்தில் இயங்கும் விமான சேவை அல்ல. 2020ம் ஆண்டில் இது $1.56 பில்லியனுக்கு நட்டத்தில் இயங்கி இருந்தது. இலங்கை மட்டுமல்லாது, Srilankan விமான சேவையும் முறியும் நிலையில் உள்ளது. இந்நிலையில் மேலும் 21 விமானங்களை குத்தகை அடிப்படையில் பெற முனைவது புத்திசாலித்தனமான நடவடிக்கை அல்ல.

IMF இலங்கையின் Srilankan விமான சேவையை தனியார் நிறுவனமாகும்படி கூறியுள்ளது.

2008ம் ஆண்டு வரை Srilankan இலாபத்தில் இயங்கி வந்தது. அப்போது Srilankan விமான சேவை UAE யின் Emirates விமான சேவையுடன் இணைந்து இயங்கியது.

அக்காலத்தில் பணம் செலுத்தி லண்டன் நகரில் இருந்து இலங்கை வர இருந்த பயணிகளை பின்தள்ளி, சுற்றுலா சென்ற தனது உறவினர்களுக்கு Srilankan ஆசனங்களை வழங்கவில்லை கோபத்தில் மகிந்த ராஜபக்ச அக்கால Emirates சார்பு Srilankan CEO வை பதிவில் இருந்து நீக்கி, தனது மைத்துனரான Nishantha Wickramasinghe யை CEO பதவியில் அமர்த்தி இருந்தார். அதன்பின் Srilankan நட்டத்தில் இயங்க ஆரம்பித்தது.

அத்துடன் அக்காலத்தில் 8 Airbus A350 விமானங்களை Srilankan குத்தகை செய்தபோது அக்கால Srilankan அதிகாரி Kapila Chandrasena $2 million இலஞ்சம் (kickbacks) பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தார். இவரும் இவரின் மனைவியும் கைதும் செய்யப்பட்டு இருந்தனர்.