சீனாவின் மூன்றாம் விமானம் தாங்கி கப்பல் வெள்ளோட்டம்

சீனாவின் மூன்றாம் விமானம் தாங்கி கப்பல் வெள்ளோட்டம்

சீனா Fujian என்ற தனது 3ம் விமானம் தாங்கி கப்பலை இன்று வெள்ளிக்கிழமை வெள்ளோட்டம் விட்டுள்ளது. அமெரிக்காவின் Ford மற்றும் Nimitz வகை supper carrier விமானம் தாங்கி கப்பல்களுக்கு நிகரானது Fujian விமானம் தாங்கி கப்பல். இது முற்றாக ஒரு சீன தயாரிப்பு.

Fujian விமானம் தாங்கி பல வழிகளில் நவீனமானது. சீனாவின் முன்னைய இரண்டு விமானம் தாங்கிகளும் ski jump முறையில் யுத்த விமானங்களை மேலே செலுத்தின. ஆனால் Fujian மின்னில் இயங்கும் catapult (Electromagnetic Aircraft Launch System) முறையில் யுத்த விமானங்களை மேலே செலுத்தும்.

Fujian விமானம் தாங்கியில் சீனாவின் J-35 வகை யுத்த விமானங்கள் நிலைகொள்ளும். அத்துடன் 300 மீட்டர் நீளம் கொண்ட இதில் சீனாவின் KJ-600 என்ற பொருட்களை காவும், எதிரிகளை நோட்டமிடும் (AWACS) விமானமும் நிலைகொள்ளும். Fujian 100,000 தொன் எடை கொண்டது என்று கூறுகிறது அமெரிக்க ஆய்வு நிறுவனம்.

Fujian இன்று வெள்ளோட்டம் விடப்பட்டாலும் அது பரிசோதனைகள் எல்லாவற்றையும் முடித்து முழுமையான சேவைக்கு வர சுமார் ஒரு ஆண்டு காலம் தேவை.

சீனா தனது அணுசக்தி மூலம் இயங்கவுள்ள 4ம் விமானம் தாங்கி கப்பலை கட்டும் பணிகளை ஏற்கனவே ஆரம்பித்து உள்ளது.